எங்களுக்காக நீங்க ஏன் மத்தவங்கள கேவலமா பேசுறீங்க.. ரசிகர்களுக்கு விஜய் சேதுபதி அட்வைஸ்!
சென்னை: தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான நடிகர் விஜய் சேதுபதி தற்போது தமிழில் முன்னணி நடிகராக உள்ளார்.
ஹீரோவாக மட்டும் இல்லாமல் வில்லன் கதாபாத்திரத்திலும் குணச்சித்திர நடிகராகவும் கலக்கி வருகிறார் விஜய் சேதுபதி.
சோசியல் மீடியாக்களில் ரசிகர்கள் சண்டை போட்டுக் கொள்வதை பற்றி மனம் திறந்து பேசி உள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.

வெற்றி நாயகன்
2019 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் விஜய் சேதுபதி. அதற்குப் பிறகு பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் போன்ற படங்களின் மூலம் பல ரசிகர்களை பெற்றார். எதார்த்த நாயகர் என்று சொல்லும் அளவிற்கு, கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கிராமத்துக் கதாபாத்திரங்களுக்கு கச்சிதமாக பொருந்திய விஜய் சேதுபதி, 2015 ஆம் ஆண்டு நானும் ரவுடி தான் படத்தின் மூலம் ரொமான்டிக் ஹீரோவாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். நானும் ரவுடி தான் படத்தை விக்னேஷ் சிவன் எழுதி, இயக்க நயன்தாரா ஹீரோயினாக நடித்திருந்தார்.

எதார்த்த நாயகன்
ஹீரோ என்றால் மிகவும் ஸ்டைலிஷ் ஆக சிக்ஸ் பேக் எல்லாம் வைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில், எதார்த்தமாக நடித்து தனக்கென ஒரு தகுதியையும் ரசிகர்கள் பட்டாளத்தையும் உருவாக்கி வைத்துள்ளார். நானும் ரவுடி தான் படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் சேதுபதி இறைவி, தர்மதுரை, விக்ரம் வேதா, செக்கச் சிவந்த வானம், 96, போன்ற பல படங்களில் வில்லன் கதாபாத்திரத்திலும் குணச்சித்திர நாயகனாக நடித்து வந்தார். சூப்பர் டீலக்ஸ் படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

வில்லனாக வெற்றி
பலரும் நடிக்க தயங்கும் கதாபாத்திரத்தை இவர் ஏற்று நடப்பதே, இவரின் வெற்றிக்கு முதல் காரணமாக கருதப்படுகின்றது. விக்ரம் வேதா, மாஸ்டர் சமீபத்தில் வெளியான விக்ரம் போன்ற படங்களில் கொடூரமாக வில்லனாகவே நடித்துள்ளார். தற்போது இவர் நடித்துள்ள மாமனிதன் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. உங்கள் ரசிகர்களிடத்தில் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்ட கேள்விக்கு. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி சொன்ன பதில் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

கேவலமா பேசாதீங்க
நடிகர் விஜய் சேதுபதி கூறி இருப்பதாவது,, " சோஷியல் மீடியாக்களில் ஒரு ஹீரோவை பற்றி பேசும்போது ரசிகர்களிடையே சண்டை வருகின்றது. சண்டை போட்டுக் கொள்கின்றனர். குடும்பத்தில் உள்ள அனைவரையும் கேவலமாக பேசுகின்றனர். இது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. நாங்கள் படம் நடிக்கின்றோம் , நன்றாகவே வளமாக இருக்கின்றோம். எங்களுக்காக நீங்கள் சண்டை போட்டுக் கொள்வதும், குடும்பத்தினரை கேவலமாக பேசிக்கொள்ளவோ வேண்டாம், யார் யாரையும் கேவலமாக பேசுவதோ, சண்டை போடுவதோ வேண்டாம் என்று கூறியுள்ளார். விஜய் சேதுபதியின் இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications











