மீண்டும் வசனகர்த்தாவாக மாறிய விஜய் சேதுபதி.. யாருக்காகத் தெரியுமா?

விக்ராந்த் நடிக்க உள்ள படத்திற்கு வசனகர்த்தாவாக மாறியிருக்கிறார் விஜய் சேதுபதி

சென்னை: விக்ராந்த் படத்திற்காக நடிகர் விஜய் சேதுபதி மீண்டும் வசனகர்த்தாவாக அவதாரம் எடுத்துள்ளார்.

96 திரைப்படத்திற்குப் பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் சீதக்காதி திரைப்படம் ரிலீஸாக உள்ளது. இப்படம் தவிர ரஜினியின் பேட்ட, அருண்குமார் இயக்கத்தில் ஒரு படம் என பிஸியாக நடித்துவருகிறார்.

இந்நிலையில், நடிகர் விக்ராந்த் நடிக்கும் புதிய த்ரில்லர் படத்திற்கு வசனம் எழுதியுள்ளார் விஜய் சேதுபதி. இப்படத்தை சஞ்சீவ் இயக்குகிறார். இவர் ஏற்கனவே, விக்ராந்தை ஹீரோவாக வைத்து தாக்க தாக்க படத்தை இயக்கியவர்.

இயக்குநர் சஞ்சீவ்:

இயக்குநர் சஞ்சீவ்:

2015 ஆம் ஆண்டு தாக்க தாக்க திரைப்படத்திற்குப் பிறகு, விஜய் சேதுபதியை மனதில் வைத்து ஒரு ஸ்கிரிப்ட் எழுதியிருக்கிறார் சஞ்சீவ். கதையை கேட்ட விஜய் சேதுபதி மற்ற படங்களில் பிசியாக இருந்ததால் பண்ண முடியவில்லை.

சிபாரிசு:

சிபாரிசு:

இதனால் மற்றொரு ஸ்கிரிப்டை தயார் செய்து விஜய் சேதுபதியிடம் சென்றபோது, இதில் விக்ராந்த் நடித்தால் நன்றாக இருக்கும் எனக் கூறிய விஜய் சேதுபதி அப்படத்திற்கு டயலாக் எழுதுவதாக ஒப்புக்கொண்டாராம். இப்படி அடுத்தடுத்து படங்களில் பிசியாக இருக்கும் அவர் எப்படி டயலாக் எழுத ஒப்புக்கொண்டார் என ஆச்சர்யமாக இருந்தது என சஞ்சீவ் சொல்கிறார்.

வசனங்கள்:

வசனங்கள்:

சஞ்சீவ், விஜய் சேதுபதி இருவரும் இணைந்து படத்தின் திரைக்கதையை எழுதியிருக்கிறார்கள். படத்தின் வசனங்கள் முழுவதையும் விஜய் சேதுபதியே எழுதியிருக்கிறார். ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக இருந்தாலும் காமெடி காட்சிகள் இருக்கும் என்கிறார் சஞ்சீவ். விக்ராந்தை ஒருநாள் நேரில் அழைத்து சர்ப்ரைஸாக இந்த விஷயத்தை சொல்லியிருக்கிறார் விஜய் சேதுபதி.

நவம்பரில் படப்பிடிப்பு:

நவம்பரில் படப்பிடிப்பு:

இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் பற்றிய விவரம் வெளியிடப்படவில்லை. நவம்பர் மாத இறுதியில் படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டுள்ளனர். ஆரஞ்சு மிட்டாய் திரைப்படத்திற்குப் பிறகு விஜய் சேதுபதி விக்ராந்துக்காக வசனகர்த்தாவாக மாறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X