ரஜினிக்கேத்த ‘ஜித்து’ ஜில்லாடி தான் விஜய் சேதுபதி!
பேட்ட படத்தில் விஜய் சேதுபதியின் கேரக்டர் போஸ்டர் வெளியாகியுள்ளது.
Recommended Video

சென்னை: ரஜினியின் பேட்ட படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் குறித்து சன் பிக்சர்ஸ் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் 'பேட்ட'. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. இதில் விஜய் சேதுபதி, திரிஷா, சிம்ரன், நவாசுதின் சித்திக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

வரும் பொங்கலுக்கு இப்படம் ரிலீசாக இருக்கிறது. ரஜினி படத்திற்கு முதல் முறையாக அனிருத் இசையமைத்துள்ளார். இதில் இடம்பெற்றுள்ள 'மரண மாஸ்' பாடலை நேற்று சன் பிக்சர்ஸ் வெளியிட்டது.
மரண மாஸ் பாடலை எஸ்.பி.பாலசுப்பிரமணியன் மற்றும் அனிருத் இணைந்து பாடியிருந்தனர். பாடலாசிரியர் விவேக்கின் வரிகளில் மிகவும் சிறப்பான எழுதப்பட்டுள்ளது. சென்னைத் தமிழில் செம குத்துப் பாடலாக உருவாக்கப்பட்டுள்ளது.
பேட்ட படத்தில் விஜய் சேதுபதி ரஜினிக்கு வில்லனாக நடித்திருக்கிறார். சமீபத்தில் அவர் ரஜினியின் தலையிலும், நாடியிலும் துப்பாக்கி வைத்திருப்பது போன்ற புகைப்படம் வெளியாகி டிரெண்டிங் ஆனது.
இந்நிலையில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் குறித்த முக்கிய அறிவிப்பை தற்போது சன் பிக்சர்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. படத்தில் அவருடைய பேர் ஜித்து என அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











