தபுவுடன் அந்த மாதிரி காட்சிகளே இல்லை.. ரொம்பவே ஃபீல் செய்யும் விஜய் சேதுபதி.. என்ன ஆனது?

சென்னை: விஜய் சேதுபதி தற்போது மிஷ்கின் இயக்கத்தில் ட்ரெய்ன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடந்துவருகின்றன. இந்தப் படம் தவிர்த்து மணிகண்டன் இயக்கத்தில் முத்து என்கிற காட்டான் வெப் சீரிஸில் நடித்திருக்கிறார். மேலும் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ஸ்லம் டாக் 33 - டெம்ப்பிள் ரோடு படத்தில் நடித்துவருகிறார். அதில் தபுவும் முக்கியமான ரோலை ஏற்றிருக்கிறர். இந்நிலையில் சேதுபதி சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்று கவனத்தை ஈர்த்திருக்கிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் விஜய் சேதுபதி இப்போது பிடித்திருக்கும் இடத்துக்கு சாதாரணமாக வந்துவிடவில்லை. அவர் ஏகப்பட்ட விமர்சனங்கள், புறக்கணிபுகளை எல்லாம் கடந்துதான் வந்தார். பல தோல்விகளையும் சந்தித்தார். அதனால் அவருக்கு வாழ்க்கையில் அனுபவங்கள் நிறைய கிடைத்திருக்கின்றன. அதன் காரணமாகத்தான் என்னவோ அவர் பேசுவது எல்லாமே தத்துவம் போல் இருக்கிறது. தான் பேசும் விஷயத்தை பக்குவமாகவும், தெளிவாகவும் பேசுவதில் சேது எப்போதுமே வல்லவர்தான்.

Vijay Sethupathi Confirms No Romance with Tabu in Slumdog 33 Temple Road
Photo Credit:

வில்லன் அவதாரம்: அந்த தெளிவோடுதான் சினிமாவையும் அணுகுபவர் அவர். பல சமயங்களில் அவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தாலும் சில நேரங்களில் பிரச்னைகளையும் கொடுத்திருக்கின்றன. முழுக்க முழுக்க ஹீரோவாக நடித்துக்கொண்டிருந்த அவர்; திடீரென வில்லனாக தோன்றினார். அவர் அப்படி நடித்த பேட்ட, மாஸ்டர் படங்கள் எல்லாம் அவருக்கு நல்ல பெயரை வேறு சம்பாதித்து கொடுத்துவிட்டது. இதன் காரணமாக தொடர்ந்து அதே பாதையிலேயே பயணிக்க ஆரம்பித்தார்.

ரசிகர்களின் கோரிக்கை: அவர் தொடர்ந்து வில்லனாக நடிப்பதை அவரது ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. கண்டிப்பாக மீண்டும் ஹீரோவாக நடிக்க வேண்டும்; இல்லையென்றால் அவரது இடம் காலியாகிவிடும் எனவும் பேச்சுக்கள் வந்தன. அதனையடுத்து நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் தனது 50ஆவது படமாக மகாராஜா படத்தில் நடித்தார். படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. இங்கு மட்டுமின்றி சீன நாட்டிலும் படத்துக்கு ஏகபோக ரெஸ்பான்ஸ். அடுத்ததாக படத்தின் இரண்டாவது பாகமும் வரவிருக்கிறது.

Also Read
ஷங்கர், அட்லீ ரூட்டை ஃபாலோ செய்யும் மாரி செல்வராஜ்.. தனுஷ் படத்தில் தரமான சம்பவம் ரெடி
ஷங்கர், அட்லீ ரூட்டை ஃபாலோ செய்யும் மாரி செல்வராஜ்.. தனுஷ் படத்தில் தரமான சம்பவம் ரெடி

விஜய் சேதுபதியின் லைன் அப்: அவர் கைவசம் இப்போது கிட்டத்தட்ட பத்து படங்கள் இருக்கின்றன. மிஷ்கின் இயக்கத்தில் ட்ரெய்ன் படத்தில் நடித்திருக்கும் அவர் அடுத்ததாக பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ஸ்லம் டாக் 33 - டெம்ப்பிள் ரோடு, தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் பாக்கெட் நாவல், மணிரத்னம் இயக்கத்தில் ஒரு படம், மணிகண்டன் இயக்கத்தில் முத்து என்கிற காட்டான் வெப் சீரிஸ் உள்ளிட்டவைகளில் நடித்திருக்கிறார். இந்நிலையில் பூரி படத்தில் தபுவுடன் நடித்த அனுபவத்தை பகிர்ந்துகொண்டார் சேது.

சேதுபதி ஓபன் டாக்: அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், "ஸ்லம் டாக் 33 - டெம்ப்பிள் ரோட் படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. இதில் தபுவும் முக்கியமான ரோலை ஏற்றிருக்கிறார். ஆனால் அவருக்கும் எனக்கும் காதல் காட்சிகளே இல்லை. எங்களது கதாபாத்திரங்கள் தீவிரமாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. உணர்வுப்பூர்வமாக தூரத்தில் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் தபுவுடன் பணியாற்றியதை நினைத்து பெருமையாக கருதுகிறேன்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X