தயவு செஞ்சு கட் பண்ணிடாதீங்க.. வெற்றிமாறனிடம் கோரிக்கை வைத்த விஜய் சேதுபதி?

சென்னை: கோலிவுட்டின் சிறந்த நடிகர்களில் ஒருவரான சூர்யாவும், சிறந்த இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறனும் வாடிவாசல் படத்தில் இணைவார்கள் என்று கூறப்பட்டது. எழுத்தாளர் சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் என்ற நாவலை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகவிருக்கிறது. இயக்குநர் அமீர் உள்ளிட்டோர் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்தச் சூழலில் வெற்றிமாறனிடம் விஜய் சேதுபதி கோரிக்கை ஒன்றை வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். அவரது முதல் படமான பொல்லாதவன் கமர்ஷியல் படமாக உருவாகியிருந்தது. ஆனால் அதற்கு அடுத்ததாக அவர் இயக்கிய ஆடுகளம் ஐந்துக்கும் மேற்பட்ட தேசிய விருதுகளை அள்ளியது. அந்தப் படத்திலிருந்து வெற்றிமாறன் தவிர்க்க முடியாத இயக்குநராகிவிட்டார். அதற்கு அடுத்ததாக அவர் இயக்கிய விசாரணை, வடசென்னை ஆகிய படங்கள் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றது. இருப்பினும் வடசென்னை படம் வட சென்னைவாசிகளை தவறாக சித்தரித்துவிட்டதென்று விமர்சனமும் எழுந்தது. ஆனால் அதெல்லாம் இல்லை சரியாகத்தான் பேசியிருக்கிறார் என்றும் வெற்றிமாறனின் ரசிகர்கள் ஒருபக்கம் பேசினர்.

Vijay Sethupathi Viduthalai Vetrimaaran

விடுதலை: தொடர்ந்து அவர் இயக்கிய அசுரன் படமும் தேசிய விருதை பெற்றது. அதனையடுத்து விடுதலை படத்தை இயக்கினார். இதற்கிடையே வாடிவாசல் படத்தை தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் போட்ட ப்ளானில் மாற்றம் ஏற்பட விடுதலை படமானது இரண்டு பாகங்களாக உருவானது. இதன் முதல் பாகம் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.

விடுதலை 2: இந்தச் சூழலில் விடுதலை படத்தின் இரண்டாம் பாக ஷூட்டிங் ஏற்கனவே முடிந்தாலும் பாகம் ஒன்று பெற்ற விமர்சனம் இதில் வரக்கூடாது என்பதற்காக படத்தில் மேலும் சில காட்சிகளை படமாக்குகிறார் வெற்றி. அதற்கான வேலைகள் மும்முரமடைந்துள்ளன. இதில் விஜய் சேதுபதிக்கு மஞ்சு வாரியர் ஜோடியாக நடிக்கலாம் என கூறப்படுகிறது. படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் நடந்துவருகிறது.

வாடிவாசல்: நாவல்களையும், சிறுகதைகளையும் படமாக்கும் முயற்சியில் வெற்றிமாறன் இப்போது தீவிரமாக இறங்கியிருக்கிறார். அப்படி அவர் இயக்கிய விசாரணை, அசுரன் ஆகிய படங்கள் இந்திய அளவில் கவனம் ஈர்த்தன. அதேபோல் சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் என்ற குறுநாவலை அதே பெயரிலேயே வெற்றிமாறன் படமாக்கவிருக்கிறார். சூர்யா கதாநாயகனாக நடிக்க, கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்.

வாடிவாசல் டெஸ்ட் ஷூட்: வாடிவாசல் படம் குறித்த அறிவிப்பு வெளியானதுமே ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்க ஆரம்பித்துவிட்டனர். ஷூட்டிங் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் விடுதலை படத்தை இயக்க வந்துவிட்டார் வெற்றிமாறன். இதற்கிடையே தமிழ்நாடு முழுவதுமிருந்து காளைகளை வரவழைத்து டெஸ்ட் ஷூட் நடத்தப்பட்டது. அதில் நடிகர் சூர்யா,டாணாக்காரன் இயக்குநரும், நடிகருமான தமிழ் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். அந்த டெஸ்ட் ஷூட் வீடியோவே ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றது. ஆனால் படத்தின் அடுத்தக்கட்ட பணிகள் தொடங்கவே இல்லை.

கோரிக்கை வைத்த விஜய் சேதுபதி: இந்நிலையில் வெற்றிமாறனிடம் விஜய் சேதுபதி கோரிக்கை வைத்திருப்பதாக கூறப்படுகிறது. அதாவது விடுதலை 2 படத்தில் மஞ்சு வாரியருக்கும், விஜய் சேதுபதிக்கும் இடையே காதல் காட்சி வருவதாகவும்; அந்தக் காட்சிகள் மிக அருமையாக வந்திருப்பதால் அதனை கட் எதுவும் செய்துவிட வேண்டாம் என வெற்றிமாறனிடம் சேதுபதி கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X