ரஜினி படத்தில் தன் வேலையை காட்டிய ஜித்து ஜில்லாடி #Petta
Recommended Video

சென்னை: ரஜினி படத்திலும் தன் வேலையை காட்டிவிட்டார் விஜய் சேதுபதி.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள பேட்ட படம் இன்று ரிலீஸாகியுள்ளது. படத்தை பார்த்தவர்கள் பழைய ரஜினியை பார்த்த திருப்தி ஏற்பட்டுள்ளது என்கிறார்கள்.
இது ரஜினி படம் என்றாலும் விஜய் சேதுபதி தனித்து நிற்கிறார்.

ஜித்து
பேட்ட படத்தில் விஜய் சேதுபதி இருக்கிறார் என்றதுமே அவர் விக்ரம் வேதா போன்று இதையும் ஓவர்டேக் செய்துவிடுவார் என்ற பேச்சு கிளம்பியது. விஜய் சேதுபதி பற்றி அவ்வளவாக விளம்பரமும் செய்யவில்லை. அப்படி இருந்தும் மனிதர் வேலையை காட்டிவிட்டார்.

மாஸ்
ரஜினியின் என்ட்ரி மட்டும் அல்ல விஜய் சேதுபதியின் என்ட்ரியும் மரண மாஸாக உள்ளது. விஜய் சேதுபதி தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துவிட்டார். அவருக்கு இன்னும் கொஞ்சம் வெயிட்டான கதாபாத்திரம் கொடுத்திருக்கலாம் என்ற பேச்சு கிளம்பியுள்ளது. பேட்ட ரஜினி படம் தான் ஆனால் அதிலும் தன்னை பற்றி பேச வைத்துவிட்டார் விஜய் சேதுபதி.
வில்லன்
பேட்ட படத்திற்காக ஹீரோ ரஜினிக்கு கட்அவுட் வைக்கப்பட்டுள்ளது வழக்கமானது. ஆனால் வில்லன் விஜய் சேதுபதிக்கு பிரமாண்ட கட்அவுட் வைக்கப்பட்டுள்ளது தான் சிறப்பு.

வருத்தம்
விஜய் சேதுபதிக்கு வெயிட்டான கதாபாத்திரம் கொடுக்கவில்லை என்று கார்த்திக் சுப்புராஜ் மீது ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர். இந்த கதாபாத்திரத்திலேயே தூள் கிளப்பிய அவர் வெயிட்டான கேரக்டர் கொடுத்தால் படத்தை ஓவர்டேக் செய்துவிடுவார் என்பது கார்த்திக்கிற்கு தெரியாமலா இருக்கும்.


Click it and Unblock the Notifications











