பக்கா ரவுடி சிம்பு.. அப்போ விஜய் சேதுபதிக்கு ‘அரசன்’ படத்துல என்ன ரோல் தெரியுமா?.. வெற்றிமாறன் வேலை!

சென்னை: ஹீரோ ரவுடியாக இருந்தா அவனை எதிர்க்கிற ஆள் போலீஸ் ஆக இருந்தால் தான் கனகச்சிதமாக இருக்கும். வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் அரசன் படத்தில் விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடித்து வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

விஜய் சேதுபதி இந்த படத்தை விட்டே விலகி விட்டார் என்றும் சிம்பு ஷூட்டிங்கிற்கே வருவதில்லை என்றும் ஏகப்பட்ட வதந்திகள் கிளம்பிய நிலையில், சமீபத்திய பேட்டியில் விஜய் சேதுபதியே அதையெல்லாம் மறுத்திருந்தார்.

Vijay Sethupathi doing cop role in Simbu s Arasan buzz goes trending

இந்நிலையில், மீண்டும் காக்கிச் சட்டை அணிந்துக் கொண்டு சிம்புவை எதிர்க்க ரெடியாகி விட்டார் விஜய் சேதுபதி. மாநாடு படத்தில் சிம்பு vs எஸ்.ஜே. சூர்யா காம்போவை இந்த முறை விஜய் சேதுபதி vs சிம்பு காம்போ மிரட்டலாக இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு: வடசென்னை படத்திலேயே சிம்புவை வைத்து படம் பண்ணவே வெற்றிமாறன் திட்டமிட்டு இருந்தார். ஆனால், அந்த சமயத்தில் சிம்பு கால்ஷீட் பிரச்சனை காரணமாக சம்மதிக்காத நிலையில், தனுஷை வைத்து அந்த படத்தைக் கொடுத்தார். இந்நிலையில், வட சென்னை உலகில் உருவாகும் படமாக அரசன் படம் உருவாகி வருகிறது. ஏற்கனவே கெளதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் கேங்ஸ்டராக சிம்பு மிரட்டியிருந்த நிலையில், அதையும் தாண்டி வெற்றிமாறன் படத்தில் மிரட்ட காத்திருக்கிறார்.

போலீஸ் அதிகாரியாக விஜய் சேதுபதி: வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை 1 மற்றும் 2 பாகங்களில் போலீஸாக சூரி நடித்திருந்தார். புரட்சியாளர் வாத்தியாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். காவல் துறையினரின் அடக்குமுறைகளுக்கு எதிரான கதாபாத்திரத்தில் நடித்த விஜய் சேதுபதி தற்போது வெற்றிமாறன் படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறாராம். கண்டிப்பாக ஒரு முரட்டுத்தனமான சம்பவம் இந்த வருட இறுதியிலேயே காத்திருக்கிறது என்கின்றனர்.

2 ஹீரோயின்கள்: சிம்புவுக்கு ஜோடியாக இந்த படத்தில் 2 ஹீரோயின்கள் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரியங்கா மோகன் மற்றும் டூரிஸ்ட் ஃபேமிலி நடிகை யோக லட்சுமி இருவரும் நடித்து வருவதாக கூறுகின்றனர். சமீபத்தில், நடைபெற்ற ரியாலிட்டி ஷோ ஒன்றில் சிம்புவுக்கு ஜோடியாக நடிப்பதாக யோக லட்சுமியே கூறியிருந்தார். விஜய் சேதுபதிக்கு இந்த படத்தில் ஜோடி இருக்கா? இல்லையா? என்பது குறித்த தகவல்கள் சீக்கிரமே வெளியாகும் என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X