For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அவெஞ்சர்ஸ்: என்ட் கேம் படத்தில் விஜய் சேதுபதி: பயந்து பயந்து வந்ததாம்

    By Siva
    |
    Vijay Sethupathi: அவெஞ்சர்ஸ்: என்ட் கேம் படத்தில் விஜய் சேதுபதி: பயந்து பயந்து வந்ததாம்

    சென்னை: அவெஞ்சர்ஸ்: என்ட் கேம் படத்தின் ஆந்தம் வெளியிடப்பட்டுள்ளது. அந்த படத்தில் அயர்ன்மேனுக்கு வாய்ஸ் கொடுத்துள்ளார் விஜய் சேதுபதி.

    அவெஞ்சர்ஸ்: என்ட் கேம் படம் வரும் 26ம் தேதி இந்தியாவில் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் படத்தின் தமிழ் ஆந்தமை இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் வெளியிட்டுள்ளார்.

    Vijay Sethupathi dubs for Ironman in Avengers: End Game

    சும்மா சொல்லக் கூடாது, ஆந்தம் அருமையாக உள்ளது. ஆந்தம் வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா ஆகியோர் கலந்து கொண்டனர். அவெஞ்சர்ஸ் படத்தில் அயர்ன்மேனுக்கு தமிழில் டப்பிங் பேசியுள்ளார் விஜய் சேதுபதி. பிளாக் விடோ கதாபாத்திரத்திற்கு ஆண்ட்ரியா டப்பிங் பேசியுள்ளார்.

    ஆந்தம் வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி பேசியதாவது,

    என் மகனுக்கு அயர்ன்மேன் கதாபாத்திரம் தான் பிடிக்கும். அவெஞ்சர்ஸ் படத்திற்கு டப்பிங் பேசுவதற்கு ஒப்புக் கொள்வதற்கு முன்பு பயந்தேன். என் டைமிங் வேறு, இன்னொரு நடிகரின் டைமிங்கை புரிந்து கொண்டு பேசுவது எப்படி என்று தெரியவில்லை. அது ரொம்ப கஷ்டம். எனக்கே நான் டப்பிங் பேசுவது கஷ்டமாக இருக்கும்.

    Vijay Sethupathi dubs for Ironman in Avengers: End Game

    பயப்படுவதா, கற்றுக் கொள்வதா என்று வருகையில் கற்றுக் கொள்ளலாம் என்று முடிவு செய்தேன். உலகம் முழுவதும் பிரபலமான ஒரு கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்துள்ளேன். நான் பயத்துடன், மகிழ்ச்சியுடன் காத்துக் கொண்டிருக்கிறேன். இந்த படத்தின் ரசிகர்கள் என்னை எப்படி பார்க்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்புடன் இருக்கிறேன்.

    படத்தில் சிறப்பு, நல்லா செய் என்பது போன்ற வார்த்தைகளை நான் சேர்த்துள்ளேன். இயல்பாக இருக்க வேண்டும் என்று நினைத்து பேசியுள்ளேன் என்றார்.

    English summary
    Vijay Sethupathi has lend his voice for Ironman in Avengers: End Game tamil version.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X