30 நிமிஷத்தில் ஒரு பாக்கெட் சிகரெட்.. அப்பா இறந்தபோது வந்த வலி.. விஜய் சேதுபதி எமோஷனல் பேச்சு

சென்னை: விஜய் சேதுபதி தமிழ் மற்றும் ஹிந்தியில் மிகச்சிறந்த நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். நடித்தால் ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்காமல் கதைக்கு தேவைப்பட்டால் வில்லனாகவும் நடித்தார். ஆனாலும் அவர் தொடர்ந்து ஹீரோவாக மட்டும்தான் நடிக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கோரிக்கை வைத்ததை அடுத்து இனி ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என்று கூறியிருக்கிறார். இந்தச் சூழலில் அவர் தனது அப்பா குறித்து எமோஷனலாக பேசியிருக்கிறார்.

சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் தலை காட்டியவர் விஜய் சேதுபதி. பிறகு சீனு ராமசாமி இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படமே சூப்பர் ஹிட்டடித்து விஜய் சேதுபதியின் நடிப்புக்கும் நல்ல பெயர் கிடைத்தது. அப்படிப்பட்ட சூழலில் நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் பங்கேற்ற கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி, பாலாஜி தரணிதரன் உள்ளிட்டோர் சினிமாவுக்குள் வந்தனர். அவர்களின் ஒரே சாய்ஸாக இருந்தது விஜய் சேதுபதிதான்.

Vijay Sethupathi Maharaja

வரிசை ஹிட்: 2010 ஆரம்பத்திலிருந்து கிட்டத்தட்ட 2016ஆம் ஆண்டு வரை விஜய் சேதுபதியின் கிராஃப் உச்சத்தில் இருந்தது. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், பீட்சா, சூதுகவ்வும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என அவர் நடித்த படங்கள் வரிசையாக ஹிட்டடித்தன. முக்கியமாக ஒவ்வொரு படத்திலும் தனது நடிப்பில் வெரைட்டியை காண்பித்தார் சேது. இதனால் அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் சேர்ந்தது.

வில்லன்: நடித்தால் ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்காமல் வில்லனாகவும் நடித்தார். பேட்ட, மாஸ்டர், விக்ரம், ஜவான் என அவர் வில்லனாக நடித்த படங்களிலும் அசால்ட்டாக ஸ்கோர் செய்தார். இதற்கிடையே ஃபர்ஸி வெப் சீரிஸிலும் நடித்து அட்டகாசம் செய்திருந்தார். ஃபர்ஸி, ஜவான் மூலம் ஹிந்தியிலும் கவனம் ஈர்த்த அவர் கடைசியாக மெரி கிறிஸ்துமஸ் படத்தில் நடித்தார்.

இனி ஹீரோதான்: மெரி கிறிஸ்துமஸ் திரைப்படம் கடந்த வருடம் டிசம்பர் 12ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த சூழலில் இனி ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என்று ஓபன் ஸ்டேட்மெண்ட் கொடுத்துவிட்டார் விஜய் சேதுபதி. எனவே அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். அவர் இப்போது மகாராஜா, மிஷ்கின் இயக்கத்தில் ட்ரெய்ன் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார். மேலும் மிஷ்கின் இயக்கிய பிசாசு 2 படத்திலும் முக்கியமான ரோலில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதி பேட்டி: மகாராஜா பேட்டி விரைவில் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு விஜய் சேதுபதி அளித்த பேட்டியில் எமோஷனலாக பேசியிருக்கிறார். அவர் அளித்த பேட்டியில், "எனது குடும்பத்தில் நான், அண்ணன், தம்பி, தங்கை. எங்கள் நான்கு பேரில் என்னிடம் மட்டும்தான், 'நீ யாருனு உனக்கு தெரியாதுடா' என்று மோட்டிவேஷனலாக பேசுவார். நானும் அவரும் ரொம்பவே க்ளோஸ். எனது அப்பாவுக்கு அபாரமான நியாபக சக்தி.

அரை மணி நேரத்தில் ஒரு பாக்கெட்: 2009ஆம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு குறும்படத்தில் நடித்துக்கொண்டிருந்தேன். அப்போது எனது அம்மாஃ போன் செய்து அப்பாவின் உடம்பு ஜில்லுனு ஆகிடுச்சு என்று சொன்னார். நான் பதற்றமாகிவிட்டேன். அப்போது அரை மணி நேரத்தில் ஒரு பாக்கெட் சிகரெட் அடித்து முடித்தேன். பிறகு படுத்த படுக்கையாக இருந்த அப்பாவை சந்தித்து கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தேன். அடுத்த நாள் காலை அவர் உயிரிழந்துவிட்டார். அவர் மட்டும் இப்போது இருந்திருந்தால் எனது வெற்றியை பார்த்தி ஆடி தீர்த்திருப்பார். எனது வெற்றியை அவரிடம் சொல்ல முடியவில்லை என்பதுதான் எனக்கு இருக்கும் வலி" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X