பல இடங்களில் அவமானம்.. திட்டிக்கொண்டே அழுதிருக்கிறேன்.. எமோஷனல் ஆன விஜய் சேதுபதி
சென்னை: விஜய் சேதுபதி தமிழ் மற்றும் ஹிந்தியில் மிகச்சிறந்த நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். நடித்தால் ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்காமல் கதைக்கு தேவைப்பட்டால் வில்லனாகவும் நடித்தார். ஆனாலும் அவர் தொடர்ந்து ஹீரோவாக மட்டும்தான் நடிக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கோரிக்கை வைத்ததை அடுத்து இனி ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என்று கூறியிருக்கிறார். இந்தச் சூழலில் அவர் தனது அனுபவம் ஒன்றை பகிர்ந்திருக்கிறார்.
சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் தலை காட்டியவர் விஜய் சேதுபதி. பிறகு சீனு ராமசாமி இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படமே சூப்பர் ஹிட்டடித்து விஜய் சேதுபதியின் நடிப்புக்கும் நல்ல பெயர் கிடைத்தது. அப்படிப்பட்ட சூழலில் நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் பங்கேற்ற கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி, பாலாஜி தரணிதரன் உள்ளிட்டோர் சினிமாவுக்குள் வந்தனர். அவர்களின் ஒரே சாய்ஸாக இருந்தது விஜய் சேதுபதிதான்.

வரிசை ஹிட்: 2010 ஆரம்பத்திலிருந்து கிட்டத்தட்ட 2016ஆம் ஆண்டு வரை விஜய் சேதுபதியின் கிராஃப் உச்சத்தில் இருந்தது. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், பீட்சா, சூதுகவ்வும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என அவர் நடித்த படங்கள் வரிசையாக ஹிட்டடித்தன. முக்கியமாக ஒவ்வொரு படத்திலும் தனது நடிப்பில் வெரைட்டியை காண்பித்தார் சேது. இதனால் அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் சேர்ந்தது.
வில்லன்: நடித்தால் ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்காமல் வில்லனாகவும் நடித்தார். பேட்ட, மாஸ்டர், விக்ரம், ஜவான் என அவர் வில்லனாக நடித்த படங்களிலும் அசால்ட்டாக ஸ்கோர் செய்தார். இதற்கிடையே ஃபர்ஸி வெப் சீரிஸிலும் நடித்து அட்டகாசம் செய்திருந்தார். ஃபர்ஸி, ஜவான் மூலம் ஹிந்தியிலும் கவனம் ஈர்த்தார்.
இனி ஹீரோதான்: இந்த சூழலில் இனி ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என்று ஓபன் ஸ்டேட்மெண்ட் கொடுத்துவிட்டார் விஜய் சேதுபதி. எனவே அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். அவர் இப்போது மகாராஜா படத்தில் நடித்திருக்கிறார். படம் வெளியாகி மெகா ஹிட்டடித்தது. அடுத்ததாக மிஷ்கின் இயக்கத்தில் ட்ரெய்ன் படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். மேலும் மிஷ்கின் இயக்கிய பிசாசு 2 படத்திலும் முக்கியமான ரோலில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் சேதுபதி பேட்டி: இந்நிலையில் விஜய் சேதுபதி தனது வாழ்க்கையில் நிகழ்ந்த அனுபவம் குறித்து பேசுகையில், "2006ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான பெண் என்ற சீரியல் எத்தனை பேருக்கு நினைவிருக்கும் என்று தெரியவில்லை. சீதா, ரேவதி, டெல்லி கணேஷ் என பலர் நடித்திருப்பார்க்ள். அதில் நடிக்கும்போது உதவி இயக்குநர்கள் பயங்கரமாக என்னை திட்டுவார்கள். அதனால் நான் பயந்து பயந்துதான் நடிப்பேன். ஆனால் இயக்குநரோ அவர்களை திட்டுவார்.
சீதா சொன்ன அட்வைஸ்: அப்போது சீதா மேடம் என்னிடம், நடிப்பை கவனி. அவங்க கண்களில் நடிப்பை எப்படி காட்றாங்கனு பாரு என்பார். அந்த சீரியலில் நடிக்கும்போது என்னுடைய வாழ்க்கை இப்படியே போய்விடுமோ என்றுதான் நினைத்தேன். பல இடங்களில் அவமானப்பட்டிருக்கிறேன். அப்போதெல்லாம் என்னையே நான் திட்டிக்கொண்டே அழுதிருக்கிறேன். ஏன் நமக்கு மட்டும் இப்படி நடக்குது என்று பலமுறை நினைத்திருக்கிறேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











