ஸ்பெஷல் மேக்கப்...ஸ்பெஷல் கெட்டப்... தளபதி 64-ல் வில்லன் விஜய் சேதுபதி கொடூர அரசியல்வாதியாமே...

By

சென்னை: விஜய்யின் தளபதி 64 படத்தில் திமிர்பிடித்த கொடுர அரசியல்வாதியாக விஜய் சேதுபதி நடிக்கிறார் என்று தெரிகிறது.

மாநகரம் படம் மூலம் அறிமுகமான இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அந்த படத்திலேயே கவனம் பெற்றார். அடுத்து கார்த்தி நடிப்பில் கைதி படத்தை இயக்கினார்.

இதில் நரேன், ஜார்ஜ் மரியான், ரமணா, அர்ஜுன் தாஸ் உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படமும் வரவேற்பைப் பெற்றது.

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

இதையடுத்து அவர் விஜய் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். சேவியர் ப்ரிட்டோவின் எக்ஸ் பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் உட்பட பலர் நடிக்கின்றனர். சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்கிறார்.

பேராசிரியர்

பேராசிரியர்

தளபதி 64 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் பேராசியராக விஜய் நடிக்கிறார் என்றும் கல்வித்துறையில் நடக்கும் ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பவராக வருகிறார் என்றும் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார்.

மற்ற படங்களில் பிசி

மற்ற படங்களில் பிசி

அவர் மற்ற படங்களில் பிசியாக இருந்ததால் இதில் கலந்துகொள்ள முடியாமல் இருந்தார். இந்நிலையில் தளபதி 64 படப்பிடிப்பில் விஜய் சேதுபதி கடந்த சில நாட்களுக்கு முன் இணைந்தார். இருவரும் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன.

அரசியல்வாதி

அரசியல்வாதி

இந்நிலையில் விஜய் சேதுபதி இதில் திமிர்பிடித்த கொடூரமான அரசியல்வாதியாக நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக அவருக்கு ஸ்பெஷல் மேக்கப் போடப்படுகிறது. ஸ்பெஷல் கெட்டப்பில் அவர் மிரட்டுகிறார் என்றும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X