பாலியல் குற்றச்சாட்டு வைத்த பெண்.. என்ஜாய் செய்யட்டும்.. விஜய் சேதுபதி சூப்பரா ஹேண்டில் செஞ்சிருக்காரே!
சென்னை: விஜய் சேதுபதி நடிப்பில் கடைசியாக தலைவன் தலைவி திரைப்படம் வெளியானது. பாண்டிராஜ் இயக்கியிருந்த அந்தப் படத்தில் நித்யா மேனன், காளி வெங்கட், மைனா நந்தினி, தீபா என பலர் நடித்திருந்தார்கள். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் படம் சூப்பர் வரவேற்பை பெற்றிருக்கிறது. சூழல் இப்படி இருக்க விஜய் சேதுபதி மீது பாலியல் புகாரை வைத்து பெண் ஒருவர்.
விஜய் சேதுபதி இப்போது மீண்டும் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்திருக்கிறார். மகாராஜா மெகா ப்ளாக் பஸ்டர், ஏஸ் தோல்வி. இப்போது அவர் பாண்டிராஜ் இயக்கத்தில் தலைவன் தலைவி படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி சூப்பர் ஹிட்டடித்தது. குடும்பங்கள் படத்தை கொண்டாடிவரும் சூழலில்; இதுவரை 50 கோடி ரூபாய்வரை வசூல் செய்திருக்கிறது என்ற பேச்சு ஓடுகிறது.
பாலியல் குற்றச்சாட்டு: இது ஒருபக்கம் இருக்க இந்த கொண்டாட மனநிலையில் ஒரு கீறல் விழுவது போல் ஒரு பெண் விஜய் சேதுபதி மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தார். ரம்யா மோகன் என்பவர் தனது எக்ஸ் பக்கத்தில், "விஜய் சேதுபதி புனிதர் மாதிரி நடிக்கிறார். அவர் கேரவன் ஃபேவர்களுக்காக இரண்டு லட்சம் ரூபாய், ஓட்டுநர்களுக்கு 50,000 ரூபாய் கொடுப்பார். எனக்கு தெரிந்த ஒரு பெண் இருக்கிறார்.

டெலிட் செய்த ரம்யா: அந்தப் பெண்ணை விஜய் சேதுபதி பல வருடங்களாக பயன்படுத்தினார். இது ஒரு கதை மட்டும் இல்லை. இதே மாதிரி இன்னும் நிறைய கதைகள் இருக்கின்றன. இவரைத்தான் மீடியா கொண்டாடுகிறது. இது வெறும் ஜோக் மட்டும் இல்லை. உண்மை" என குறிப்பிட்டிருந்தார். இந்த ட்வீட் பெரிய பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த ட்வீட்டை டெலிட் செய்துவிட்டு; ட்விட்டர் அக்கவுண்ட்டையும் நீக்கிவிட்டார் ரம்யா.
சேதுவின் விளக்கம்: இந்நிலையில் தனியார் ஆங்கில ஊடகமான டெக்கன் க்ரானிக்கலுக்கு சேதுபதி அளித்த பேட்டியில் இதுகுறித்து மௌனம் கலைத்திருக்கிறார். அவர் அந்தப் பேட்டியில், " சமீபத்தில் என்னை பற்றி பேசப்பட்டதை பார்த்து என்னை முழுமையாக தெரிந்தவர்கள் சிரிப்பார்கள். இதுபோன்று மோசமான புகார்கள் ஒருபோதும் என்னை பாதிக்காது. எனது குடும்பத்தினரும், நண்பர்களும் கவலையடைந்திருக்கிறார்கள்.
விடுங்கப்பா என்ஜாய் செய்யட்டும்: நான் அவர்க்ளிடம், விடுங்க ப்பா என கூறியிருக்கிறேன். கவனம் ஈர்க்கவே அந்தப் பெண் அப்படி சொல்லியிருக்கிறார். சில நிமிட புகழுக்காக செய்திருக்கிறார். அவர் அதை என்ஜாய் செய்யட்டுமே. இந்த விவகாரம் பற்றி சைபர் க்ரைவில் புகார் கொடுத்திருக்கிறோம். ஏழு ஆண்டுகளாக அனைத்தையும் பார்த்துவிட்டேன். என்னை குறிவைத்தாலும் என்ன பாதிக்காது. நான் நடித்த படம் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. எனது பெயரை கெடுத்தால் என்னுடைய படத்தை நாசம் செய்யலாம் என பொறாமையில் சில செய்திருக்க வாய்ப்பு இருக்கிறது. யார் வேண்டுமானாலும் யாரை பற்றியும் எதுவும் சொல்லலாம். சோஷியல் மீடியாவில் ஒரு அக்கவுண்ட் இருந்தால் போதும்" என்றார்.


Click it and Unblock the Notifications











