twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    2019ல் ஹிட் கொடுக்கத் தவறிய விஜய் சேதுபதி!

    |

    சென்னை: 2019 ஆம் ஆண்டு ஹிட் கொடுக்க முடியாமல் போன உச்ச நடிகர் விஜய் சேதுபதி. தமிழ் சினிமாவில் விற்க முடியாத கலைஞன் தனது யதார்த்தமான நடிப்பால் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர். ஒரு துனை நடிகராக தனது திரை பயனத்தை ஆரம்பித்து அவர் தற்போது தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரம்.

    விஜய் சேதுபதி 1998 ஆம் ஆண்டு கோகுலத்தில் சீதை படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்.பின் புதுப்பேட்டை, லீ, வென்னிலா கபடி குழு, நான் மகான் அல்ல மற்றும் பலே பாண்டியா போன்ற பல படங்களில் சிறு குறு கதாபாத்திரத்திலேயே நடித்தார் விஜய் சேதுபதி. பின் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த தென்மேற்கு பருவகாற்று படம் தான் அவர் அப்பொழுது வரை நடித்த ஒரு மிகச்சிறந்த படமாக அமைந்தது.

    அப்பொழுது தெரியவில்லை தமிழ் திரையுலகில் ஒரு யதார்த்தமான நடிகன் இரண்டு மூன்று வருடங்களில் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக மாற போகிறான் என்று.

    2019ல் உங்களை ரசிக்க வைத்த ஹீரோ யாரு.. ஓட்டு போட்டு பதிலை சொல்லுங்க!

     அடுத்தடுத்து ஹிட்

    அடுத்தடுத்து ஹிட்

    அடுத்த இரண்டு வருடங்களில் வெளியானது பீட்சா மற்றும் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் இந்த இரண்டு படங்களும் இவரின் திரை வாழ்க்கையில் ஒரு ஒளியை காட்டியது. பின் சூது கவ்வும் படம் வெளியானது இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று தந்தது. அதே வருடம் இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா படமும் வெளியாகி வெற்றி பெற்றது.

     உச்சம் தொட்ட விஜய் சேதுபதி

    உச்சம் தொட்ட விஜய் சேதுபதி

    விஜய் சேதுபதி உச்சம் தோட்ட சமயம் 2016 - 2017 ஆம் ஆண்டு தான் இவர் நடித்த அனைத்து படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது போலீஸ் அதிகாரியாக சேதுபதி காமெடி ரவுடியாக நானும் ரவுடி தான் நடித்தார்.

     தர்துரை படம்

    தர்துரை படம்

    இவரை குடும்பங்கள் மத்தியில் கொண்டு சேர்த்த படம் தர்மதுரை இப்படத்தில் ஆகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். பின் டானாக நடித்த விக்ரம் வேதா திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று இவருக்கு ஒரு நல்ல மார்கெட்டை ஏற்படுத்தியது.

    96

    96

    அடுத்த வருடம் அவர் நடித்த இமைக்கா நொடிகள், செக்க சிவந்த வானம் போன்ற படங்கள் ஹிட் ஆகின. 96 என்ற படம் அதே வருடம் ரிலீஸ் ஆகி இன்று வரை அப்படம் அனைவரிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

     வெற்றி பெற முடியவில்லை

    வெற்றி பெற முடியவில்லை

    2019 ஆம் ஆண்டு விஜய் சேதுபதியால் அவர் படங்கள் கடந்த வருடங்களில் பெற்ற வெற்றியை இந்த வருடத்தில் அவரின் ஒரு படத்தில் கூட பெற முடியவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

     சூப்பர் டீலக்ஸ்

    சூப்பர் டீலக்ஸ்

    சிந்துபாத்,சூப்பர் டீலக்ஸ் மற்றும் சங்கதமிழன் போன்ற படங்கள் வெளியாகி வெற்றி பெறவில்லை. விஜய் சேதுபதி ஒரு கதை தேர்ந்தேடுத்தால் அதில் தனக்கென்று நடிப்பில் தனி முத்திரை பதிப்பார்.ஆனால் இந்த வருடம் அப்படி சொல்லிக் கொள்ளும் அளவிற்கு படங்கள் இல்லை.

    காத்திருக்கும் 7 படங்கள்

    காத்திருக்கும் 7 படங்கள்

    அடுத்த வருடம் விஜய் சேதுபதிக்கு ஆறு முதல் ஏழு படங்கள் ரீலிஸ் ஆக உள்ளன. இவை அனைத்தும் அவருக்கு ஹிட் ஆக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    English summary
    vijay sethupathi failure in 2019 year movies
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X