மனைவியை நெஞ்சோடு அணைத்து… திருமணநாளை கொண்டாடிய விஜய்சேதுபதி!

சென்னை : விஜய்சேதுபதி தனது 18வது திருமண நாளை தனது குடும்பத்துடன் கொண்டாடி உள்ளார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

இவர் நடித்து முடித்த சுமார் 10 படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

விஜய்சேதுபதி

விஜய்சேதுபதி

ஹீரோ காமெடியன் வில்லன் என அணைத்து கதாபாத்திரங்களுக்கும் பக்காவாக பொருந்தும் விஜய் சேதுபதி தன் எதார்த்தமான பேச்சு மற்றும் நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அதிலும் அவர் சமீபத்தில் நடித்திருக்கும் மாஸ்டர் திரைப்படத்தின் பவானி கதாபாத்திரம் அனைவரின் மனதையும் வென்றது.

காதல் திருமணம்

காதல் திருமணம்

விஜய் சேதுபதி 2003-ம் ஆண்டு ஜெஸ்ஸி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட பின்னர் துபாயில் தான் பணிபுரியும் வேலையில் விருப்பமில்லாமல் இந்தியா திரும்பினார். அதன்பின் 2004 ம் ஆண்டு எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படத்தில் கவனிக்கப்படாத கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த காதல் தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளார்.

18வது திருமணநாள்

18வது திருமணநாள்

விஜய்சேதுபதி, 18வது திருமண நாளை தனது மனைவி, மகன் மற்றும் மகளுடன் கொண்டாடி உள்ள புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் விஜய்சேதுபதியின் மனைவி அவரை நெஞ்சோடு அணைத்துக்கொண்டு அழகாக இருக்கிறார். அவரது மகன் மற்றும் மகளின் தோளில் கைபோட்டுக்கொண்டு இருக்கிறார் விஜய்சேதுபதி. இணையத்தில் வெளியாகி உள்ள இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகிறது. பல திரைப்பிரபலங்களும் அவருக்கு திருமண வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

விஜய்சேதுபதியின் மகன்

விஜய்சேதுபதியின் மகன்

விஜய்சேதுபதியின் மகன் சூர்யா, சிந்துபாத், ஜூங்கா ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். ஜூங்கா திரைப்படத்தில் அவரது மகன் மிகவும் சிறுவனாக இருந்த நிலையில் தற்போது அவர் விஜய் சேதுபதி அளவிற்கு வளர்ந்து பெரிய பையனாக காட்சியளிப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரேம்போ

ரேம்போ

விஜய்சேதுபதி நடிக்கும், காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் கலக்கலான பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. இந்த படத்தில் விஜய்சேதுபதி ரஞ்சன்குடி அன்பரசு முருகேச பூபதி ஓஹூந்திரன் என்ற கேரக்டரில் நடித்துள்ளதாகவும், இந்த பெயர் சுருக்கமாக 'ரேம்போ' என அழைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X