இது தான் அதுவா, தெரியாமப் போச்சே: கவலையில் விஜய் சேதுபதி
சென்னை: நடிகை ஸ்ரீப்ரியா இயக்கியுள்ள மாலினி 22 பாளையங்கோட்டை படத்தில் நடிக்காமல் போய்விட்டோமே என்று விஜய் சேதுபதி கவலையில் உள்ளார்.
வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக இருந்து இன்று பிரபலமான ஹீரோவாகிவிட்டார். அவரை வைத்து படம் எடுக்க இயக்குனர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
அதனால் அவரது கால்ஷீட் டைரி அடுத்த 2 ஆண்டுகளுக்கு நிரம்பிவிட்டது. இந்நிலையில் ஒரு படத்தில் நடிக்காமல் போய்விட்டோமே என்ற கவலையில் உள்ளார் சேதுபதி.

22 ஃபீமேல் கோட்டயம்
மலையாளத்தில் வெளியான 22 ஃபீமேல் கோட்டயம் படத்தை பார்த்த விஜய் சேதுபதிக்கு அது மிகவும் பிடித்துவிட்டது. தமிழில் யாராவது அதை ரீமேக் செய்தால் அதில் நிச்சயம் தான் நடிக்க வேண்டும் என்று விரும்பினார்.

மாலினி 22 பாளைங்கோட்டை
நடிகை ஸ்ரீப்ரியா 22 ஃபீமேல் கோட்டயம் படத்தை மாலினி 22 பாளையங்கோட்டை என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்து வருகிறார். இந்த படத்தில் புதுமுகம் க்ரிஷ் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக நித்யா மேனன் நடிக்கிறார்.

தெரியாமல் போச்சே
22 ஃபீமேல் கோட்டயம் படத்தின் ரீமேக் தான் மாலினி 22 பாளையங்கோட்டை என்று எனக்கு தெரியாமல் போயிற்று. இது தெரிந்திருந்தால் ஸ்ரீப்ரியா மேடத்தை சந்தித்து வாய்ப்பு கேட்டிருப்பேனே என்று புலம்புகிறாராம் விஜய் சேதுபதி.

நெகடிவ்
படத்தில் ஹீரோவுக்கு நெகடிவ் கதாபாத்திரம் அதனால் யாரும் நடிக்க விரும்ப மாட்டார்கள். எனவே தான் நான் புதுமுகமான க்ரிஷை தேர்வு செய்தேன் என்று ஸ்ரீப்ரியா தெரிவித்துள்ளார். ஆனால் விஜய் சேதுபதி ஆர்வமாக இருந்தது அவருக்கு தெரியாமல் போயிற்று.


Click it and Unblock the Notifications











