»   »  விஜய் சேதுபதி காட்டுல அடைமழை.. அடுத்த வருச இறுதி வரைக்கும் ஷெட்யூல் இருக்கு!

விஜய் சேதுபதி காட்டுல அடைமழை.. அடுத்த வருச இறுதி வரைக்கும் ஷெட்யூல் இருக்கு!

Posted By:
Subscribe to Oneindia Tamil
விஜய் சேதுபதி காட்டுல அடைமழை

சென்னை : தமிழ்த் திரையுலகத்தில் தற்போதைக்கு கையில் அதிகப் படங்களை வைத்திருக்கும் முன்னணி நடிகர் விஜய் சேதுபதி.

அவர் நடித்துள்ள 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படம் வரும் பிப்ரவரி 2-ம் தேதி வெளியாக உள்ளது.

இந்த வருடம் பல படங்கள் ஷூட்டிங்கு காத்திருக்கின்றன. அடுத்த ஆண்டு இறுதி வரை அவரது படங்கள் வரிசையாக வெளியாக இருக்கின்றன.

இடம் பொருள் ஏவல்

இடம் பொருள் ஏவல்

விஜய் சேதுபதி நடித்து முடித்து சில ஆண்டுகளாக கிடப்பில் உள்ள 'இடம் பொருள் ஏவல்' திரைப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் சேதுபதிக்கு இருக்கும் மார்க்கெட்டை பயன்படுத்தி இந்தத் திரைப்படம் விரைவில் வெளியிடப்பட இருக்கிறதாம்.

ஜுங்கா

ஜுங்கா

விஜய் சேதுபதி தற்போது '96', 'சூப்பர் டீலக்ஸ்', 'ஜுங்கா' ஆகிய படங்களில் மாறி மாறி நடித்து வருகிறார். அந்தப் படங்களுடன் தமிழில் 'சீதக்காதி' படத்திலும், மணிரத்னம் இயக்க உள்ள படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

மாமனிதன்

மாமனிதன்

சில நாட்களுக்கு முன்பு அவர் அடுத்து நடிக்க உள்ள 'மாமனிதன்' படத்தின் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இந்தப் படத்திற்கு இளையராஜா - யுவன் சங்கர் ராஜா - கார்த்திக் ராஜா ஆகிய மூவரும் இசையமைக்க இருக்கிறார்கள்.

இன்னும் அதிகரிக்கும்

இன்னும் அதிகரிக்கும்

இந்தப் படங்களையும் சேர்த்தால் விஜய் சேதுபதி கைவசம் படப்பிடிப்பில் 6 படங்கள் உள்ளன. இதுதவிர தெலுங்கில் உருவாகும் படத்திலும் நடிக்கிறார். தமிழ், தெலுங்கில் தயாராக உள்ள 'சை ரா நரசிம்ம ரெட்டி' படத்திலும் நடிக்க உள்ளார்.

புதிய படங்கள்

புதிய படங்கள்

இவையில்லாமல் பல புதிய இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என பலரும் விஜய் சேதுபதியிடம் தொடர்ந்து கதை சொல்லி வருகிறார்களாம். இன்னும் படங்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

அரசியல் பேசும் விஜய் சேதுபதி

அரசியல் பேசும் விஜய் சேதுபதி

2019 வரை விஜய் சேதுபதி மேலும் சில படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் என்றும் சொல்கிறார்கள். மேடைக்கு மேடை விழாக்களில் பல பொதுப் பிரச்சனைகளைப் பற்றிப் பேசும் விஜய் சேதுபதி தனது படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளில் வெகு ஆர்வத்தோடு கலந்துகொண்டும் வருபவர்.

English summary
Vijay Sethupathi, lead actor who has more films this year inTamil film industry. The movie 'Oru nalla naal paathu solren' will be released on February 2. Many films are waiting for this year. His films are lined up to the end of next year.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil