ரஜினி, விஜய், கமல்... அடுத்ததா யாரு... விஜய் சேதுபதியின் வேற லெவல் ப்ளான்!

சென்னை : நடிகர் விஜய் சேதுபதி கேரக்டர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர்.

வில்லன், வயதான தாத்தா, தாதா, திருநங்கை என இவர் தேர்ந்தெடுக்கும் கேரக்டர்கள் இவரை உயிர்ப்புடன் வைத்துள்ளது.

வில்லன் கேரக்டர்களின் மிரட்டிவரும் இவர் ரஜினி, விஜய் மற்றும் கமலுக்கு வில்லனாகியுள்ளார்.

மக்கள் செல்வனாக விஜய் சேதுபதி

மக்கள் செல்வனாக விஜய் சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதி மக்கள் செல்வனாக ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார். இவர் தேர்ந்தெடுக்கும் கேரக்டர்கள் இவரை எப்போதும் புகழின் உச்சியிலேயே வைத்திருக்கிறது. வில்லன், தாத்தா, தாதா, திருநங்கை என இவர் தேர்ந்தெடுக்கும் கேரக்டர்கள் இவரை தொடர்ந்து கோலிவுட்டின் மக்கள் செல்வனாக வைத்துள்ளது.

கடைசி விவசாயி படம்

கடைசி விவசாயி படம்

தற்போது கடைசி விவசாயி படத்தில் முக்கியமான ரோலில் நடித்துள்ளார். இந்தப் படம் தற்போது திரையரங்குகளில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடி வருகிறது. இவரது கேரக்டரும் பேசப்பட்டுள்ளது. வித்தியாசமான கெட்டப்பில் விவசாயிகள் குறித்து பேசும் இவரது கேரக்டர் மிகுந்த வரவேற்பிற்கு உள்ளாகியுள்ளது.

வித்தியாசமான கதாபாத்திரங்கள்

வித்தியாசமான கதாபாத்திரங்கள்

தொடர்ந்து கோலிவுட்டில் வித்தியாசமான கெட்டப்புகளை தேர்ந்தெடுத்து நடித்துவரும் இவர், மற்ற முன்னணி நடிகர்கள் ஏற்க தயங்கும் வில்லன் கேரக்டரையும் ஏற்று நடித்து வருகிறார். அஜித்திற்கு பிறகு தைரியமாக வில்லன் கேரக்டரை ஏற்று நடிக்கும் பக்குவம் இவருக்குதான் இருக்கிறது.

ரஜினி, விஜய், கமலுக்கு வில்லன்

ரஜினி, விஜய், கமலுக்கு வில்லன்

ரஜினியின் பேட்ட, விஜய்யின் மாஸ்டர் மற்றும் கமல்ஹாசனின் விக்ரம் படங்களில் வில்லனாகி அதன்மூலம் தன்னுடைய நடிப்பை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்ற விஜய் சேதுபதி, அடுத்ததாக கோலிவுட்டின் பிரபல ஹீரோவிற்கும் வில்லனாகவுள்ளார்.

கார்த்தியின் வில்லன்

கார்த்தியின் வில்லன்

அடுத்ததாக ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்திலும் வில்லனாகவுள்ளார். இதற்கான பேச்சுவார்த்தைகளை மும்முரமாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் இதன் அறிவிப்பு வெளியாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

2வது முறையாக கூட்டணி

2வது முறையாக கூட்டணி

ஏற்கனவே கார்த்தியின் நான் மகான் அல்ல படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இந்நிலையில் 12 ஆண்டுகள் கழித்து தற்போது இவர்கள் இருவரும் மீண்டும் இணையவுள்ளது சிறப்பாக பார்க்கப்படுகிறது. ரஜினி, விஜய், கமல் ஆகியோரை மிரட்டிய விஜய் சேதுபதி, கார்த்தியை எப்படி மிரட்டுவார் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X