புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 25 லட்சம் நிவாரணப் பொருட்கள் வழங்கிய விஜய் சேதுபதி
சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ரூ. 25 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை அளித்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.
கஜா புயலால் டெல்டா மாவட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊர், உலகிற்கே சோறு போடும் விவசாயிகள் உண்ண உணவின்றி, குடிக்க நீரின்றி தவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கியுள்ளார் விஜய் சேதுபதி.

விஜய் சேதுபதி
புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மெழுகுவர்த்தி வேண்டும் என்று கேட்டு வருகிறார்கள். இந்நிலையில் எமர்ஜென்சி லைட் உள்ளிட்ட ரூ. 25 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை அளித்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.

சேவ் டெல்டா
கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் நிவாரண உதவி கேட்டு கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ட்விட்டர், ஃபேஸ்புக்கில் சேவ் டெல்டா என்று போஸ்ட் போட்டால் மட்டும் போதாது. விஜய் சேதுபதி போன்று உதவி செய்தால் தான் நம் வயிறை குளிர வைக்கும் விவசாயிகளின் மனதை குளிர வைக்க முடியும்.
கருணாகரன்
நடிகர் கருணாகரன் மன்னார்குடி பகுதிக்கு நேரில் சென்று நிவாரண பொருட்களை அளித்துள்ளார். இது போன்று பிற பிரபலங்களும் நிவாரண உதவி செய்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பேருதவியாக இருக்கும்.
நெட்டிசன்கள்
ரூ. 25 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் அளித்துள்ள விஜய் சேதுபதிக்கு நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மக்கள் செல்வன் என்பதை நிரூபித்துவிட்டார் அவர்.


Click it and Unblock the Notifications











