இது இன்னொரு தெலுங்கு படம்... பிரபல நடிகரின் மகனுக்கு வில்லனாகிறாரா விஜய் சேதுபதி?

By

சென்னை: நடிகர் விஜய் சேதுபதி தெலுங்கு படத்தில் பிரபல நடிகரின் மகனுக்கு வில்லனாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

இன்றைய தேதியில் பிசி நடிகர் விஜய் சேதுபதிதான். ஒவ்வொரு படத்துக்கும் கொஞ்சம் கொஞ்சமாக கால்ஷீட் கொடுத்து நடித்துவருகிறார்.

இப்போது, விஜய்யின் மாஸ்டர், ஜனநாதனின் லாபம், யாதும் ஊரே யாவரும் கேளிர், துக்ளக் தர்பார் ஆகிய படங்களில் நடித்து வருகிறா

ஆமிர்கான்

ஆமிர்கான்

விஜய் சேதுபதியிடம் கதை சொல்ல புதிய இயக்குனர்கள் முதல், ஒன்றிரண்டு படங்கள் பண்ணிய இயக்குனர்கள் வரை காத்திருக்கிறார்கள். கதை சொன்னவர்களும் ஏராளம். இதனால் வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து அவர் நடித்துவருகிறார். இந்தியில் ஆமிர்கான் நடிக்கும் லால் சிங் சத்தா என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

அல்லு அர்ஜுன்

அல்லு அர்ஜுன்

தெலுங்கில் சிரஞ்சீவியின் சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்திருந்தார் விஜய் சேதுபதி. இதையடுத்து மேலும் சில தெலுங்கு படங்களில் நடிக்க அவருக்கு அழைப்பு வந்துள்ளது. அதன்படி உப்பென்னா என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து பிரபல தெலுங்கு ஹீரோ அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்திலும் வில்லனாக நடிக்கிறார். இதை நடிகர் அல்லு அர்ஜுன் ஒரு நிகழ்ச்சியில் உறுதிப்படுத்தினார்.

நாகபாபுவின் மகன்

நாகபாபுவின் மகன்

சுகுமார் இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்க இருக்கிறது. ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இதையடுத்து அவர் மேலும் ஒரு தெலுங்கு படத்தில் வில்லனாக நடிக்க இருக்கிறார். இந்தப் படத்துக்கு பாக்ஸர் என்று டைட்டில் வைத்துள்ளனர். இதில் வருண் தேஜ் ஹீரோவாக நடிக்கிறார். இவர் பிரபல நடிகரும் சிரஞ்சீவின் சகோதரருமான நாகபாபுவின் மகன்.

பாக்ஸர்

பாக்ஸர்

நாகபாபு தமிழில் லிங்குசாமி இயக்கிய வேட்டை, மீராகதிரவன் இயக்கிய விழித்திரு, கலாபிரபு இயக்கிய இந்திரஜித் ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பாக்ஸர் படத்தை கிரண் கொர்ரபட்டி என்ற அறிமுக இயக்குனர் இயக்குகிறார். அவர், விஜய் சேதுபதி நடித்தால் அந்த கேரக்டர் வலுவாக இருக்கும் என்று கூறியதை அடுத்து அவரிடம் பேசிவருவதாகப் படக்குழு கூறியுள்ளது. ஆனால், உறுதிப்படுத்தவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X