“நரைய பாக்காதீங்க.. படத்தோட கதையப் பாருங்கய்யா..” - விஜய் சேதுபதி
சென்னை: கதாபாத்திர அமைப்பும், கதையும் தான் முக்கியமே தவிர, வயதானவனாக நடிப்பது எனக்கு முக்கியமில்லை என நடிகர் விஜய்சேதுபதி கூறியுள்ளார்.
"பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படங்களை அடுத்து விஜய சேதுபதியின் நடிப்பில் வெளியாகவுள்ள அடுத்த படம், சூது கவ்வும்.
இதில் 40 வயது கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி. வளரும் நடிகர்கள் இளமையாக, சாக்லேட் ஹீரோவாக நடிப்பதைததான் பெரிதும் விரும்புவார்கள். இவர்களில் வேறுபட்டுள்ளார் விஜய் சேதுபதி.

பருவக்காற்றில் அறிமுகம்...
தென்மேற்கு பருவக்காற்றில் அறிமுகமாகி, பீட்சாவில் கொஞ்சம் திகிலடையச் செய்து, நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் என்று நம்மை குழம்ப வைத்தவர் விஜய்சேதுபதி.

சூது கவ்வும்...
விஜய்சேதுபதி, சஞ்சிதா ஷெட்டி ஜோடியாக நடிக்கும் படம் சூதுகவ்வும். ராதாரவி, சிம்ஹா, அசோக், ரமேஷ், நெல்லை சிவா ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தை நலன் குமாரசாமி இயக்குகிறார். சி.வி.குமார் தயாரிக்கிறார். ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா, ஸ்டூடியோ சுரேஷ் ஆகியோர் இணைந்து இப்படத்தை வெளியிடுகின்றனர்.

அதுக்குள்ள வயசாகிடுச்சா?
சூது கவ்வும் படத்தில், 40 வயதை கடந்த வேடத்தில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி. அவரது தலையிலும், மீசையிலும் ஆங்காங்கே நரைமுடி தென்படுகிற வேடம்.

கதையப் பாருங்க...
இதுபற்றி விஜய்சேதுபதி கூறும் போது, "என்னைப் பொறுத்தவரை, கதைக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறேன். இளமையாகத்தான் நடிப்பேன் என்று சொல்லாமல், கதை, என்னை எத்தனை வயதுக்காரனாக நடிக்கச் சொல்கிறதோ, அதற்கேற்ப என்னை முழுசாக மாற்றிக் கொண்டு நடிக்க தயாராகியிருக்கிறேன்.

முதலில் குறும்படம்...
சூதுகவ்வும் கதையை முதலில் குறும்படமாக உருவாக்கி இருந்தனர். அப்போதே இந்த கதை எனக்கு தெரியும். இயக்குனர் நலன் குமாரசாமியும் எனது நண்பர்.இந்த கதை படமாகும் போது நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதன்படி இந்த கேரக்டரை நானே கேட்டுவாங்கினேன்.

60ஓ.. 40ஓ... கதை தான் முக்கியம்
40 வயதோ, 60 வயதோ எதுவாக இருந்தாலும், கதைக்கு தேவைப்பட்டால் தயங்காமல் நடிப்பேன். கதாநாயகன் ஆன பிறகு எப்படி வேண்டுமானாலும் நடிக்கலாம். நாற்பது வயதாக இருந்தாலும் அறுபதி வயதாக இருந்தாலும் நடிக்கலாம்', என்கிறார், விஜயசேதுபதி.


Click it and Unblock the Notifications











