Vijay Sethupathi - விஜய் சேதுபதிதான் அடுத்த விஜயகாந்த்.. என்ன தயாரிப்பாளர் பொசுக்குனு இப்படி சொல்லிட்டாரு?
சென்னை: கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி, சத்யராஜ், லால், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடித்திருக்கும் சிங்கப்பூர் சலூன் படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இதில் விஜய்சேதுபதி, தயாரிப்பாளரும், விஜயகாந்த்துக்கு நெருக்கமானவருமான டி.சிவா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
தமிழ் சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் தலை காட்டி ஹீரோவாக வளர்ந்தவர் விஜய் சேதுபதி. அவர் முதன்முதலில் நடித்த தென்மேற்கு பருவக்காற்று படத்தில் தன்னுடைய நடிப்பால் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். மேலும் தமிழ் சினிமாவில் பெரும் ரவுண்டு வருவார் என்றும் பலரால் கணிக்கப்பட்டார்.

தொடர் ஹிட்டுகள்: அதற்கேற்றபடிதான் விஜய் சேதுபதியின் கிராஃப்பும் இருந்தது. அவர் நடித்த பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும், சூதுகவ்வும் ஆகிய படங்கள் வரிசையாக மெகா ஹிட்டாகின. இதனால் அத்தனை வருட உழைப்புக்கும் சேர்த்து வெற்றிகளை சுவைத்தார் சேது. முக்கியமாக ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய நடிப்பு, டயலாக் டெலிவரி என அனைத்தையும் மாற்றி தான் ஒரு மிகச்சிறந்த நடிகன் என்பதை ஆணித்தரமாக நிரூபித்தார்.
கதைதான் முக்கியம்: இடையில் சில சறுக்கல்களை சந்தித்த விஜய் சேதுபதி கதை என்ன கேட்டாலும் அதற்காக எது வேண்டுமானாலும் செய்வேன் என்ற நிலைக்கு நகர்ந்தார். பொதுவாக ஒருவர் ஹீரோவாக ஹிட் கொடுத்துவிட்டால் அந்த இடத்திலிருந்து நகர மறுப்பார்கள். ஆனால் விஜய் சேதுபதியோ அப்படி இல்லை. ஹீரோவாக பீக்கில் இருந்தபோதே பேட்ட, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களில் வில்லனாகவும் கலக்கினார்.
ஹிந்தியில் என்ட்ரி: அதேபோல் தமிழில் கலக்கிக்கொண்டிருந்த விஜய் சேதுபதி ஹிந்தியிலும் நுழைந்திருக்கிறார். அவரது நடிப்பில் வெளியான ஃபர்ஸி வெப் சீரிஸ் பெரும் வெற்றி பெற்றது. அதேபோல் மாநகரம் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடித்த ஜவான் படத்தில் வில்லனாகவும் நடித்தார். மேலும் மாநகரம் படத்தின் ஹிந்தி ரீமேக்கான மும்பைகர் படத்திலும் நடித்தார். அவரது நடிப்பில் கடைசியாக மெரி கிறிஸ்துமஸ் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பையே பெற்றது. தமிழில் ட்ரெய்ன், மகாராஜா ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்துவருகிறார்.
சிங்கப்பூர் சலூன்: இந்த சூழலில் கோகுல் இயக்கத்தில் உருவாகியிருக்கும் சிங்கப்பூர் சலூன் படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இப்படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க; ஆர்.ஜே.பாலாஜி, சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். நேற்று நடந்த விழாவில் விஜய் சேதுபதி, தயாரிப்பாளர் டி.சிவா உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர்.
டி.சிவா பேச்சு: விழாவில் பேசிய டி.சிவா, "தமிழ் சினிமாவில் ஹீரோக்கான இலக்கணத்தை உடைத்தவர்களில் விஜய் சேதுபதியும் ஒருவர். தன்னுடைய எளிமை பண்பால் இவ்வளவு தூரம் உயர்ந்து நிற்கிறார். தங்களுடைய பட புரோமோஷனுக்கு அந்த ஹீரோக்களை போராட்டி அழைத்து வர வேண்டிய சூழலில் இவ்வளவு பிஸியான ஷெட்யூலிலும் அடுத்த பட ப்ரோமோஷனுக்காக விஜய் சேதுபதி வட்ந்ஹிருக்கிறார். இதற்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
அடுத்த விஜயகாந்த்: மறைந்த கேப்டன் விஜயகாந்த்தை பற்றி யார் பேசினாலும் அவர் நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதர் என்றுதான் முதலில் சொல்வார்கள். அதேபோல் இப்போது விஜய் சேதுபதியையும் நல்ல மனிதர் என்று சொல்கிறார்கள். உருவத்திலும் சரி குணத்திலும் சரி விஜயகாந்த் இடத்தை அவர் நிரப்பிவிட்டார். யார் கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் உதவி செய்துவருகிறார். இப்போதைய தலைமுறையில் அதிக கெஸ்ட் ரோலில் நடித்த நடிகர் விஜய் சேதுபதியாகத்தான் இருப்பார்" என்றார்.


Click it and Unblock the Notifications











