Don update:..விஜய் சேதுபதி பற்றி சிவகார்த்திகேயன் வியந்து சொன்ன அந்த விஷயம்...

சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் இப்பொழுது தமிழ் சினிமாவில் அனைவரும் ரசிக்கும் உச்ச நடிகராக உள்ளவர்

கமர்ஷியல் ரீதியாக தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வரும் இவர் இப்பொழுது சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் படத்தில் நடித்து முடித்துள்ளார்

விஜய் சேதுபதி மற்றும் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் சக போட்டியாளர்களாக ரசிகர்களால் பார்க்கப்படும் நிலையில் விஜய் சேதுபதி தனக்கு போட்டியாக இருக்கிறார் என்பது பற்றி சிவகார்த்திகேயன் பேசியுள்ளார்

 கமர்ஷியல் பார்முலாவில்

கமர்ஷியல் பார்முலாவில்

தொகுப்பாளராக இருந்த இப்போது தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக மாறிய நடிகர் சிவகார்த்திகேயன். 3 படத்தில் காமெடியனாக நடித்த பின் மெரினாவில் ஹீரோவாக அறிமுகமான சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து கமர்சியல் வெற்றி படங்களை கொடுத்த இப்போது தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத நடிகராக உள்ளார். சிவகார்த்திகேயன் திரைப்படங்கள் என்றாலே காதல் காமெடி ஆக்ஷன் என அனைத்தும் கலந்த கமர்ஷியல் பார்முலாவில் இருக்கும். குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் சிவகார்த்திகேயனுக்கு மிகப் பெரிய வரவேற்பு உள்ளது

 டான்

டான்

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் வித்தியாசமான நடிப்பில் சமீபத்தில் வெளியான டாக்டர் திரைப்படம் மாபெரும் வெற்றி வசூலை அள்ளியது அதைத் தொடர்ந்து இப்போது இயக்குநர் அட்லியின் உதவியாளர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மகிழ்வித்து

மகிழ்வித்து

சிவகார்த்திகேயன் இதுவரை பல கதாபாத்திரங்களில் தோன்றி அனைவரையும் மகிழ்வித்து இருந்தாலும் இப்போது முதல் முறையாக கல்லூரி மாணவனாக டான் படத்தில் நடித்து வருகிறார். டாக்டர் படத்தை தொடர்ந்து நடிகை பிரியங்கா மோகன் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். ஆர் ஜே விஜய், எஸ் சூர்யா, சூரி, சமுத்திரக்கனி என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்து வருகிறது

 தெலுங்கில் அறிமுகமாகிறார்

தெலுங்கில் அறிமுகமாகிறார்

டான் பட வேலைகள் அனைத்தும் முடிந்து ரிலீஸுக்கு தயாராக உள்ள நிலையில் தெலுங்கில் ஜாதி ரத்னாலு என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் படத்தில் நடித்து தெலுங்கிலும் அறிமுகமாகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் இப்படம் உருவாகி வரும் படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. வித்தியாசமான கதைகளில் மட்டுமல்லாமல் புது புது இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்றி வரும் சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக விஜய் சேதுபதி என ரசிகர்களால் பார்க்கப்படுகிறது.

 வேறு வேறு ரூட்டில்

வேறு வேறு ரூட்டில்

தமிழ் சினிமாவில் ஒரே நேரத்தில் கலக்கிய எம்ஜிஆர் சிவாஜி, ரஜினி கமல், விஜய் அஜித் போன்ற வரிசையில் இப்பொழுது சிவகார்த்திகேயன் விஜய் சேதுபதி இணைந்துள்ளனர். வேறு வேறு ரூட்டில் பயணித்தாலும் ரசிகர்கள் இவர்களை போட்டியாளர்களாக பார்க்கின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய சிவகார்த்திகேயன்..

Recommended Video

Sivakarthikeyan-அ முதல் முறையா!! Jr.NTR Speech in RRR grand Pre-Release event | Filmibeat Tamil
 டெரிஃபிக்கான ஆக்டர்

டெரிஃபிக்கான ஆக்டர்

எல்லாரும் விஜய் சேதுபதியை எனக்கு போட்டியாளராக பார்க்கின்றார்கள் ஆனால் நான் அவரை அப்படிப் பார்க்கவில்லை. அவருடைய படங்கள் மற்றும் பர்ஃபாமென்ஸை நான் ரொம்ப ரசிக்கிறேன். அவர் படங்களில் செய்யும் ஒவ்வொரு விஷயங்களும் புதுசா இருக்கு அதுவும் நல்லா இருக்கு. அதெல்லாம் இதுவரைக்கும் ஸ்கிரீன்ல பார்க்காத ஒன்னா இருக்கு. விஜய் சேதுபதி ஒரு டெரிஃபிக்கான ஆக்டர் என விஜய் சேதுபதி குறித்த தன்னுடைய பார்வையை ஓபனாக அந்த நேர்காணலில் பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X