»   »  2016ம் ஆண்டின் நம்பர் ஒன் ஹீரோ 'ஹிட் குமாரு' விஜய் சேதுபதி

2016ம் ஆண்டின் நம்பர் ஒன் ஹீரோ 'ஹிட் குமாரு' விஜய் சேதுபதி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 2016ம் ஆண்டின் நம்பர் ஒன் ஹீரோ என்று விஜய் சேதுபதியை தான் கூற வேண்டும்.

சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து மெல்ல மெல்ல முன்னேறி ஹீரோவானவர் விஜய் சேதுபதி. அலப்பறை இல்லாத சிம்பிளான ஹீரோ என்று பெயர் வாங்கியுள்ளார்.

இந்த ஆண்டு மட்டும் அதுவும் இதுவரை மட்டும் விஜய் சேதுபதியின் நடிப்பில் சேதுபதி, காதலும் கடந்து போகும், இறைவி, தர்மதுரை, ஆண்டவன் கட்டளை, றெக்க என 6 படங்கள் வெளியாகியுள்ளன.

ஹிட்

ஹிட்

ஒரே ஆண்டில் ஒரு ஹீரோவின் 6 படங்கள் வெளியானதே பெரிய விஷயம் என்றால் அந்த ஆறுமே ஹிட்டானது மிகப் பெரிய விஷயம். அங்கு தான் விஜய் சேதுபதி தனித்துவம் பெறுகிறார்.

புரியாத புதிர்

புரியாத புதிர்

ஏற்கனவே 6 ஹிட் படங்கள் கொடுத்துள்ள விஜய் சேதுபதி நடித்திருக்கும் புரியாத புதிர் படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. இந்த ஆண்டின் நம்பர் ஒன் ஹீரோ விஜய் சேதுபதி தான்.

2017

2017

2016ம் ஆண்டு மட்டும் அல்ல 2017ம் ஆண்டிலும் விஜய் சேதுபதி ஏகத்திற்கும் பிசி. அடுத்த ஆண்டும் அவர் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் ரிலீஸாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பெரிய நடிகர்கள்

பெரிய நடிகர்கள்

பிற ஹீரோக்கள் ஆண்டுக்கு 2 படங்களில் நடிக்கிறார்கள். அதிலும் மிகப் பெரிய ஹீரோக்கள் ஆண்டுக்கு ஒரேயொரு படத்தில் தான் நடிக்கிறார்கள். அந்த படமும் ஹிட்டாகுமா என்பதை கூற முடியாத நிலை.

English summary
Vijay Sethupathi who has given six hit movies so far in 2016 is the Ghilli of this year.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil