விஜய்க்காக அட்ஜஸ்ட் பண்ணும் விஜய் 'வில்லன்' சேதுபதி?
Recommended Video
சென்னை: தளபதி 64 படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியை அணுகியுள்ளார்களாம்.
விஜய் அட்லி இயக்கத்தில் பிகில் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்திற்கு தற்போதைக்கு தளபதி 64 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
தளபத 64 படத்தில் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி விஜய் ஜோடியாக நடிப்பார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் விஜய்க்கு வில்லனாக நடிக்குமாறு லோகேஷ் கனகராஜ் விஜய் சேதுபதியை கேட்டுள்ளாராம்.

விஜய் சேதுபதி கை நிறைய படங்கள் வைத்துள்ளார். டேட்ஸ் கொடுக்க முடியாத அளவுக்கு பிசியாக இருக்கும் அவர் தளபதி 64 படத்திற்காக டேட்ஸ் அட்ஜஸ்ட் செய்வதாக தெரிவித்துள்ளாராம். விஜய் சேதுபதி ஒரு விஷயம் செய்கிறேன் என்று கூறினால் நிச்சயம் செய்வார். அதனால் விஜய் படத்தில் அவர் நடிப்பார் என்று நம்பப்படுகிறது.

விஜய் சேதுபதி ஏற்கனவே பேட்ட படத்தில் ரஜினிகாந்துக்கு வில்லனாக நடித்தவர். அவருக்கு வில்லத்தனம் செய்வது ஒரு பெரிய விஷயமே இல்லை. செம வில்லனாக நடிப்பார். அதனாலேயே அவர் விஜய்க்கு வில்லனாக வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்.
விஜய்யும், விஜய் சேதுபதியும் மோதிக் கொள்வதை பார்க்கும் ஆவல் தற்போதே ஏற்பட்டுள்ளது. தான் ஒரு முன்னணி ஹீரோ என்று பந்தா பண்ணுவதே இல்லை விஜய் சேதுபதி. யாராவது வில்லனாக நடிக்க அழைத்தாலும் மகிழ்ச்சியுடன் செல்கிறார். மேலும் பிற முன்னணி ஹீரோக்களின் படங்களிலும் நடிக்கிறார்.
அவர் சிரஞ்சீவியின் சயீரா நரசிம்ம ரெட்டி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் பாலிவுட் நடிகர் ஆமீர் கானின் லால் சட்டா படத்தில் அவருக்கு நண்பராக உள்ளார். மனிதர் செல்லும் வழியே தனி வழியாக உள்ளது.


Click it and Unblock the Notifications











