’அரசன்’ படப்பிடிப்பில் சிம்புவுடன் இணைந்த விஜய் சேதுபதி.. ஆத்தி அசுர சம்பவம் லோடிங்!

சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பே ஒன்று சேர்ந்து இருக்க வேண்டிய கூட்டணி தற்போது கால தாமதம் ஆனாலும், கரெக்ட்டான நேரத்தில் ஒன்றாக இணைந்து புதிய சம்பவத்தை செய்ய தயாராகி விட்டது.

நடிகர் தனுஷ் வடசென்னை படத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்த நிலையில், அந்த படத்துக்கு ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்தது. வடசென்னை 2ம் பாகம் எப்போது உருவாகும் என்பதே ரசிகர்கள் பலரும் தொடர்ந்து வைத்து வரும் கோரிக்கையாக இருந்தது.

Vijay Sethupathi joins along with Simbu in Arasan shooting spot
Photo Credit:

தனுஷுடன் மீண்டும் வெற்றிமாறன் இணைந்து வடசென்னை 2 பண்ணாமல் அசுரன் படத்தை இயக்கினார். அதன் பின்னர், விடுதலை 1 மற்றும் 2 படங்களை முடித்த அவர், தற்போது மீண்டும் வடசென்னை உலகத்துக்குள் காலடி எடுத்து வைத்துள்ளார்.

சிம்பு - விஜய் சேதுபதி சந்திப்பு: ஆனால், இந்த முறை வடசென்னை உலகத்தில் தனுஷுக்கு பதிலாக சிம்புவுடன் கைகோர்த்துள்ளார் வெற்றிமாறன். மேலும், மதுரையில் அரசன் படத்தை ஆரம்பித்துள்ளார். சிம்பு ரொம்ப ஸ்லிம்மாக மீண்டும் மாறி அரசனாக அவதாரம் எடுத்துள்ளார். இந்த படத்தில் அவருக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க உள்ள நிலையில், அரசன் படப்பிடிப்பு தளத்தில் சிம்புவை சந்தித்த புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டாக வருவேன்: நடிகர் தனுஷ் ஒரு வருஷத்துக்கு அனைத்து மொழிகளிலும் ஒரு மிகப்பெரிய வெற்றிப் படத்தைக் கொடுத்துக் கொண்டே தொடர்ந்து படங்களையும் இயக்கி படு பிசியாக உள்ளார். லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவேன் என்பது போல, கடந்த 2 ஆண்டுகளாக தனது பிரம்மாண்டமான ட்ரீம் புராஜெக்ட்டுக்காக முடியெல்லாம் வளர்த்து தற்காப்பு கலையெல்லாம் பயின்று வந்த தனுஷ், அந்த படம் தாமதமான நிலையில், தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் படத்தில் ஒரு வழியாக இணைந்து விட்டார். படத்தின் ஷூட்டிங்கும் தொடங்கி விட்டது.

Vijay Sethupathi joins along with Simbu in Arasan shooting spot
Photo Credit:

மீண்டும் சந்திரா: வடசென்னை உலகம் என்பதால், இந்த படத்திலும் ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது. நேற்று திடீரென சந்திரா கெட்டப்பில் ஆண்ட்ரியா போட்டோ ஒன்றை வெளியிட்டு சந்திரா என்றும் கேப்ஷன் கொடுக்க, ரசிகர்கள் உற்சாகமாகி விட்டனர். இந்நிலையில், தற்போது வெற்றிமாறன் உடன் சிம்பு மற்றும் விஜய் சேதுபதி இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகி இருக்கிறது. அரசன் படத்தின் கிளைமேக்ஸில் மட்டும் தனுஷின் கேமியோ இருந்தால் தியேட்டர்கள் தெறிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X