லாபத்தில் விஜய் சேதுபதியுடன் இணையும் ஸ்ருதி ஹாசன் - வித்தியாசமான கெட்அப்

சென்னை: நடிகர் விஜய் சேதுபதியும் நடிகை ஸ்ருதி ஹாசனும் முதன் முறையாக இணைந்து நடிக்கும் லாபம் திரைப்படத்தில் விஜய் சேதுபதி வித்தியாசமான இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தன்னுடைய எதார்த்தமான நடிப்பு தான் விஜய் சேதுபதியின் ஸ்பெஷல். அவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்திலும் அந்த கதாபாத்திரமாகவே தோன்றினார். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் இருக்கும். அதுவும் இயல்பாக நடிக்க அனைவராலும் முடியாது.

அது தான் விஜய் சேதுபதி ஸ்டைல். தமிழில் மாமனிதன், சிந்துபாத் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழி படங்களிலும் வெளுத்து கட்டி வருகிறார் நம்ம விஜய் சேதுபதி.

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

2015ஆம் ஆண்டில் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் புறம்போக்கு என்ற பொதுவுடமை படத்தில் நடித்த விஜய் சேதுபதி இப்போது அவரது நான்காம் படமான லாபம் என்று பெயரிடப்பட்டுள்ள திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார். அதோடு இந்தப் படத்தை விஜய் சேதுபதியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் மற்றும் இயக்குநர் ஆறுமுக குமாரின் 7சி.எஸ்.எண்டெர்டெய்ன்மெண்ட் இணைந்து தயாரிக்கவிருப்பது முக்கிய அம்சமாகும்.

ஸ்ருதிஹாசன் ஜோடி

ஸ்ருதிஹாசன் ஜோடி

முதல் முறையாக ஸ்ருதி ஹாசனுடன் ஜோடி சேர்கிறார். சமீபத்தில் ஸ்ருதி ஹாசன் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் விஜய் சேதுபதியை பேட்டி எடுத்திருந்தார். இந்நிலையில் தற்போது லாபம் படத்தில் இருவரும் சேர்ந்துள்ளனர். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் ஸ்ருதி, விஜய் சேதுபதி நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

டபுள் ஆக்சன்

டபுள் ஆக்சன்

இப்படத்தில் விஜய் சேதுபதி இரண்டு விதமான கதாபாத்திரங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் பிரபலமான ஜெகபதி பாபு இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இளம் நாயகன் கலையரசன், தன்ஷிகா ஆகியோர் நடிக்கவிருப்பதாக வந்த தகவலை அடுத்து தமிழ் திரையுலகின் நடிகர் மற்றும் இயக்குனர் பாண்டியராஜனின் மகன் ப்ரித்வியும் இப்படத்தில் இணைத்துள்ளதாக அறிவிப்பு விடுத்தனர்.

கிராமத்தில் நட்சத்திர பட்டாளம்

கிராமத்தில் நட்சத்திர பட்டாளம்

இப்படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய, டி.இமான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அம்பாசமுத்திரம், தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது. பெரிய நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடிக்கவுள்ளனர். விஜய் சேதுபதியின் வெற்றி செண்டிமெண்ட் இந்த படத்திலும் ஒர்க் அவுட் ஆகுமா என்பதை படம் வெளிவரும் வரை காத்திருப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X