இவர் யாரென தெரிகிறதா... நடிப்பில் புலி எனப் புரிகிறதா!
விஜய் சேதுபதியின் வித்தியாசமான புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
Recommended Video

சென்னை: விஜய் சேதுபதி விவசாயியாக நடிக்கும் படத்தின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து, அந்த கதைக்கு தேவையான தோற்றத்தில் நடிப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. சிவாஜி, கமல், விக்ரம் ஸ்டைலை பாலோ செய்து வரும் விஜய் சேதுபதி, தனது யதார்த்தமான நடிப்பால் படத்திற்கு படம் அசத்தி வருகிறார்.

தற்போது அவர், ரஜினியின் பேட்ட படத்தில் வில்லனாக நடிக்கிறார். இதிலும் வித்தியாசமான தோற்றம் தான் அவருக்கு என்கின்றனர். விஜய் சேதுபதி போலீசாக நடித்துள்ள மணிரத்னத்தின் 'செக்க சிவந்த வானம்' திரைப்படம் அடுத்த வாரம் திரைக்கு வரவிருக்கிறது.
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள சீதக்காதி திரைப்படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. இத்திரைப்படத்தில் அவர் 75 வயது முதியவர் வேடத்தில் நடிக்கிறார். பிராஸ்தடிக் மேக்கப்பில் அவரது தோற்றம் மிக தத்ரூபமாக அமைந்துள்ளது.
இந்நிலையில் அவரது மற்றொரு வித்தியாசமான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. முதிய விவசாயியாக அதில் அவர் காட்சியளிக்கிறார். மணிகண்டன் இயக்கத்தில் உருவாகி வரும் கடைசி விவசாயி படத்தின் புகைப்படமாக இது இருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
உண்மையில் ஒரு விவசாயி எப்படி இருப்பாரோ அப்படியே தன்னை உருமாற்றியிருக்கிறார் விஜய் சேதுபதி. உன்னிப்பாக கவனித்தால் மட்டுமே இது விஜய் சேதுபதி என கண்டுபிடிக்க முடியும்.


Click it and Unblock the Notifications











