விஜய் சேதுபதியை அவமானப்படுத்திய பாலிவுட்?..மனுஷன் ஓபனா சொல்லிட்டாரே.. அய்யோ இப்படியும் நடந்திருக்கா?

சென்னை: தமிழில் முன்னணி ஹீரோவாக இருக்கும் விஜய் சேதுபதி பாலிவுட்டிலும் நடித்துவருகிறார். அவரது நடிப்பில் மெரி கிறிஸ்துமஸ் திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. ஸ்ரீராம் ராகவன் இயக்கியிருக்கும் இப்படத்தில் கத்ரீனா கைஃப் ஹீரோயினாக நடித்திருக்கிறார். படம் நாளை வெளியாகவிருப்பதால் ப்ரோமோஷன் பணிகள் சூடு பிடித்துள்ளன. இந்த சூழலில் விஜய் சேதுபதி அளித்திருக்கும் பேட்டி இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் தலை காட்டி ஹீரோவாக வளர்ந்தவர் விஜய் சேதுபதி. அவர் முதன்முதலில் நடித்த தென்மேற்கு பருவக்காற்று படத்தில் தன்னுடைய நடிப்பால் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். மேலும் தமிழ் சினிமாவில் பெரும் ரவுண்டு வருவார் என்றும் பலரால் கணிக்கப்பட்டார்.

Vijay Sethupathi Latest Interview About his Experience in Bollywood

தொடர் ஹிட்டுகள்: அதற்கேற்றபடிதான் விஜய் சேதுபதியின் கிராஃப்பும் இருந்தது. அவர் நடித்த பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும், சூதுகவ்வும் ஆகிய படங்கள் வரிசையாக மெகா ஹிட்டாகின. இதனால் அத்தனை வருட உழைப்புக்கும் சேர்த்து வெற்றிகளை சுவைத்தார் சேது. முக்கியமாக ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய நடிப்பு, டயலாக் டெலிவரி என அனைத்தையும் மாற்றி தான் ஒரு மிகச்சிறந்த நடிகன் என்பதை ஆணித்தரமாக நிரூபித்தார்.

கதைதான் முக்கியம்: இடையில் சில சறுக்கல்களை சந்தித்த விஜய் சேதுபதி கதை என்ன கேட்டாலும் அதற்காக எது வேண்டுமானாலும் செய்வேன் என்ற நிலைக்கு நகர்ந்தார். பொதுவாக ஒருவர் ஹீரோவாக ஹிட் கொடுத்துவிட்டால் அந்த இடத்திலிருந்து நகர மறுப்பார்கள். ஆனால் விஜய் சேதுபதியோ அப்படி இல்லை. ஹீரோவாக பீக்கில் இருந்தபோதே பேட்ட, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களில் வில்லனாகவும் கலக்கினார்.

ஹிந்தியில் என்ட்ரி: அதேபோல் தமிழில் கலக்கிக்கொண்டிருந்த விஜய் சேதுபதி ஹிந்தியிலும் நுழைந்திருக்கிறார். அவரது நடிப்பில் வெளியான ஃபர்ஸி வெப் சீரிஸ் பெரும் வெற்றி பெற்றது. அதேபோல் மாநகரம் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடித்த அவர் கடைசியாக ஹிந்தியில் ஜவான் படத்தில் வில்லனாக நடித்தார். மேலும் மாநகரம் படத்தின் ஹிந்தி ரீமேக்கான மும்பைகர் படத்திலும் நடித்தார்.

மெரி கிறிஸ்துமஸ்: இந்த சூழலில் அவர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் மெரி கிறிஸ்துமஸ் படத்தில் நடித்திருக்கிறார். இதில் கத்ரீனா கைஃப் ஹீரோயினாக நடித்திருக்கிறார். ஃபர்ஸி, ஜவான், மும்பைகர் ஆகிய படங்களின் மூலம் பாலிவுட்டில் பெரும் கவனம் ஈர்த்திருக்கும் விஜய் சேதுபதிக்கு கண்டிப்பாக இந்தப் படமும் ஹிட் படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ட்ரெய்லரும் அதனை உறுதிப்படுத்தும் வகையில் இருந்ததாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். படமானது நாளை வெளியாகவிருக்கிறது.

விஜய் சேதுபதி பேட்டி: இந்நிலையில் படத்தின் ப்ரோமோஷனை ஒட்டி விஜய் சேதுபதி நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "ரசிகர்களின் அன்பு எப்போதுமே உண்மை என்று நம்புகிறேன். அவர்களின் அன்பை பெறுவது ஒரு எனர்ஜி ட்ரிங்க் போன்றது. மக்கள் உங்களை நேசிக்கும்போது உங்களது பணியை அவர்கள் புரிந்துகொண்டார்கள் என்று அர்த்தம். எனது ரசிகர் மன்றங்களில் இருந்து இதை நான் புரிந்துகொண்டேன். அது எப்போதும் எனக்கு ஆற்றலை தருகிறது.

எல்லோரும் வருகிறார்கள்: மும்பைக்கு நான் முதன்முதலில் வந்தபோது சிலருக்குதான் என்னை தெரிந்திருந்தது. ஆனால் இப்போது நிறைய பேருக்கு என்னை தெரியும். அவர்கள் என்னிடம் பேச வருகிறார்கள். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை கொடுக்கிறது. நான் சரியான பாதையில் போய்க்கொண்டிருக்கிறேன் என்று உணர்கிறேன். அதேசமயம் பாலிவுட் விழாக்களுக்கு எளிமையான உடைகளும், செருப்புகளும் அணிந்து செல்வதால் நிறைய கிண்டல்களை நான் எதிர்கொண்டிருக்கிறேன். அதனால் பாதிக்கப்பட்டும் இருக்கிறேன்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X