முதலமைச்சர் விஜய்யிடம் சூப்பர் கோரிக்கை வைத்த விஜய் சேதுபதி.. கமல் ரூட்டை பிடிச்சிருக்காரே
சென்னை: தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் ஃபேமஸான நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. இடையில் வில்லன் ரோல் மட்டும் செய்துகொண்டிருந்த அவர்; தனது ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று மீண்டும் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அப்படி அவர் நடித்த மகாராஜா திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. கடைசியாக அவர் முத்து என்கிற காட்டான் வெப் சீரிஸில் நடித்திருந்தார். அடுத்ததாக மிஷ்கின் இயக்கத்தில் ட்ரெய்ன் படம் வெளியாகவிருக்கிறது.
விஜய் சேதுபதி இந்திய சினிமாவில் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர். ஆனால் இந்த நிலைக்கு அவர் வருவதற்கு பல வருடங்கள் கடுமையான உழைப்பை தொடர்ந்து சினிமாவுக்கு கொடுத்துக்கொண்டே இருந்தார். அவர் சினிமாவுக்கு உண்மையாக உழைத்ததால் அவரையும் சினிமா கைவிடவில்லை. தொடர்ச்சியாக ஹிட் படங்களில் நடித்த அவர்; திடீரென வில்லன் ரோல்களிலும், கெஸ்ட் ரோல்களிலும் அதிகம் நடிக்க ஆரம்பித்தார். விக்ரம், பேட்ட, மாஸ்டர், ஜவான் என வரிசையாக வில்லன் ரோல் ஏற்றார்.

மீண்டும் ஹீரோவான சேதுபதி: ஆனால் இப்படியே போனால் அவ்வளவுதான் என அவரது ரசிகர்கள் எச்சரித்தார்கள். அதுமட்டுமின்றி மீண்டும் ஹீரோவாக நடிக்க வேண்டும் எனவும் வேண்டுக்கோள் வைத்தார்கள். அதனை ஏற்று நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் தனது 50ஆவது படமாக மகாராஜா படத்தில் கதாநாயகனாக ரீ என்ட்ரி கொடுத்தார். படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது. இந்தியாவில் மட்டுமின்றி சீனாவிலும் படத்துக்கு ஏகப்பட்ட ரெஸ்பான்ஸ். அதனைத் தொடர்ந்து நடித்த ஏஸ் படம் சுமார் ரகம்தான். கடைசியாக காந்தி டாக்ஸ் வெளியானது.
அடுத்த படங்கள்: அடுத்ததாக அவர் நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ட்ரெய்ன் படம் வரவிருக்கிறது. கலைப்புலி எஸ். தாணு இப்படத்தை தயாரித்திருக்கிறார். முதன்முறையாக மிஷ்கினுடன் சேது இணைந்திருப்பதால் பெரிய எதிர்பார்ப்பை படம் சம்பாதித்திருக்கிறது. அதேபோல் காக்கா முட்டை மணிகண்டன் இயக்கத்தில் முத்து என்கிற காட்டான் வெப் சீரிஸில் கடைசியாக நடித்திருந்தார். அது ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது.
அரசன் படத்தில் வில்லன்?: அவர் மீண்டும் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்துவிட்டாலும்; தனக்கு முக்கியத்துவம் இருந்தால் மற்ற ரோல்களையும் செய்துவருகிறார். அந்தவகையில் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகிவரும் அரசன் படத்திலும் கமிட்டாகியிருக்கிறார். இதில் அவர் வில்லன் கேரக்டரை ஏற்றிருக்கிறாரா இல்லை கேரக்டர் ரோலா என்பது அடுத்தடுத்த அப்டேட்டுகள் வரும்போது தெரியும். மேலும் ஜெயிலர் 2விலும் முக்கியமான ரோலை ஏற்றிருக்கிறாராம். இந்நிலையில் சமீபத்தில் விஜய் சேதுபதி முதலமைச்சர் விஜய்க்கு கோரிக்கை வைத்திருக்கிறார்.
சேதுவின் கோரிக்கை: அவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், "மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு ஒரு கோரிக்கை. கமல்ஹாசன் ஏற்கனவே கேட்டது மாதிரி தமிழ்நாடு அரசு ஓடிடி பிளாட்ஃபார்மை தொடங்கினால் நல்லது. ஓடிடி மார்க்கெட் என்ற ஒன்று திடீரென வந்தது. அப்படியே மேலே கொண்டு சென்றார்கள். திடீரென விட்டுவிட்டார்கள் தியேட்டர் டிக்கெட்டுகள் விலையும் ஏற்றினால் நன்றாக இருக்கும்"என்றார்.


Click it and Unblock the Notifications
