அது நான் இல்லை அட்மின்: ஹெச். ராஜாவை கலாய்த்த விஜய் சேதுபதி

By Siva

சென்னை: 96 பட பிரஸ் மீட்டில் பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜாவின் பெயரை சொல்லாமல் அவரை கலாய்த்துள்ளார் விஜய் சேதுபதி.

பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்துள்ள 96 படம் வரும் அக்டோபர் மாதம் 4ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் படக்குழு செய்தியாளர்களை சந்தித்து பேசியது.

அப்போது விஜய் சேதுபதி கூறியதாவது,

பிரேம்

பிரேம்

இந்த படம் பிரேமால் தான் துவங்கியது. செக்கச் சிவந்த வானம் படத்தை கூட எதிர்பார்ப்பு இல்லாமல் வந்து பார்க்குமாறு கூறினோம். ஆனால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாகிவிட்டதால் பயமாக உள்ளது. அந்த எதிர்பார்ப்பை இந்த படம் நிச்சயம் நிறைவேற்றும் என்று நான் நம்புகிறேன். ஆனாலும் இதை தாண்டி பெரிய பயம் இருக்கிறது. எங்களின் பயத்தை சந்தோஷமாக மாற்றப்போது பார்வையாளர்கள் தான். அந்த நாளுக்காக காத்திருக்கிறோம்.

மனநிறைவு

மனநிறைவு

இந்த படத்தில் வேலை பார்த்த அனைவருமே ரொம்ப நிம்மதியாக வேலை பார்த்தோம். நிம்மதி என்றால் யாருக்கும், யார் மீதும் சந்தேகம் இல்லை. ரசித்து ரசித்து வேலை செய்தோம். அதனால் இந்த படத்தில் அனைவருக்கும் சமமான பங்கு உள்ளது. இந்த படத்தில் எங்களுக்கு மனநிறைவு கிடைத்தது. அதை நீங்கள் திரையில் பார்ப்பீர்கள்.

சர்வே

சர்வே

என் வீட்டில் நடந்தது சர்வே என்று தான் வருமான வரித்துறை அதிகாரிகள் சொன்னார்கள். நியூஸ் தப்பாக பரவினால் வேகமாக பரவும், பப்ளிசிட்டி தான் அது. நல்லது. ரொம்ப சீக்கிரமான பப்ளிசிட்டி எதுவென்றால் நீங்கள் தப்பாக பேசினால் வேகமாக பரவும். அது காசு கொடுத்தால் கூட கிடைக்காது. நம்ம ஊரில் கண்டதையும் பேசினால் தான் பப்ளிசிட்டி என்று ஒரு டிரெண்ட் இருக்கிறது.

அட்மின்

அட்மின்

பப்ளிக்காக கத்தி பேசிவிட்டு நான் பேசவில்லை என் அட்மின் பேசினாரு இல்லை என்றால் எனக்கு பதிலாக மிமிக்ரி பண்ணிவிட்டார்கள் என்று சொல்லலாம். அது என் வீடு இல்லை, என் வீடு மாதிரி செட் போட்டு சோதனை செய்துள்ளார்கள். நான் வெளிப்படையாக பேச மாட்டேன். நான் ரொம்ப பயந்தவன். என்னை பார்த்தால் தெரியவில்லையா?. நிஜமாகவே அது என் வீடு இல்லை. என் வீடு, அலுவலகம் போன்று செட்டு போட்டு சோதனை செய்துள்ளனர் என்றார் விஜய் சேதுபதி.

விஜய் சேதுபதி

பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜாவை விஜய் சேதுபதி இப்படி பப்ளிக்காக கலாய்த்துள்ளதை பார்த்த நெட்டிசன்கள் அவரை பாராட்டியுள்ளனர். ஏற்கனவே அந்த அட்மின், மிமிக்ரி பற்றி நெட்டிசன்கள் கலாய்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் விஜய் சேதுபதி இப்படி பேசியது அவர்களுக்கு எல்லாம் மகிழ்ச்சியாகிவிட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X