உங்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன் அண்ணா… விஜய்சேதுபதியை புகழ்ந்த ஸ்ரீசாந்த்!
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியும், கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தும் நேரில் சந்தித்து உரையாடியுள்ளனர்.
இந்த புகைப்படங்களை கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வரும் நிலையில் ரசிகர்கள் இதை வைரலாக்கி வருகின்றனர்.

ரசிகர்களிடம் அன்பாக
ஆர்ப்பாட்டம் இல்லாமலும்... அலட்டல் இல்லாமலும் எப்போதும் புன்முறுவலுடன் இருப்பவர் விஜய்சேதுபதி... அடிமட்டத்தில் இருந்து கடுமையாக உழைத்து இன்று முன்னணி நடிகர் என்ற உயர்ந்த இடத்திற்கு வந்துள்ளார். கடந்து வந்த பாதையை என்றும் மறவாத விஜய்சேதுபதி ரசிகர்களிடம் மிகுந்த அன்புடனேயே நடந்து கொள்வார்.

கட்டி அணைத்து முத்தம்
குறுகிய காலத்தில் தனக்கென தனிரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார் விஜய்சேதுபதி. தன்னை சந்திக்கும் ரசிகராக இருந்தாலும் சரி... பிரபலமாக இருந்தாலும் சரி அவர்களை ஆரத்தழுவி முத்தம் கொடுப்பதை வழக்கமாகவே வைத்துள்ளார். மாஸ்டர் பட செட்டில் விஜய் சேதுபதி, விஜய்க்கு முத்தம் கொடுத்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானது. அதேபோலே கர்ணன் பட வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜை கட்டி அணைத்து கையில் முத்தமிட்டார் விஜய் சேதுபதி.
Recommended Video

விஜய்சேதுபதியுடன் ஸ்ரீசாந்த்
தற்போது, நடிகர் விஜய்சேதுபதியும், கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தும் நேரில் சந்தித்து பேசியுள்ளனர். இந்த புகைப்படத்தை ஸ்ரீசாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், உங்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன் அண்ணா என்று கூறியுள்ளார். இந்த புகைப்படம் அவரின் ரசிகர்களால் வைரலாகி வருகிறது.

வரிசையாக 3 படங்கள்
மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள லாபம் திரைப்படம் செப்டம்பர் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதேபோல, தில்லி பிரசாத் இயக்கிய துக்ளக் தர்பார் திரைப்படம் செப்டம்பர் 10-ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று சன் தொலைக்காட்சியில் நேரடியாக வெளியானது. மேலும், விஜய் சேதுபதி, டாப்ஸி அனபெல் சேதுபதி திரைப்படம் செப்டம்பர் 17-ம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த மாதத்தில் மட்டும் விஜய்சேதுபதி நடித்த 3 திரைப்படங்கள் வெளியாகின.

பல படங்களில்
மாமனிதன்,கடைசி விவசாயி, யாதும் ஊரே யாவரும் கேளீர், மகிழ், காத்து வாக்குல ரெண்டு காதல், விடுதலை, விக்ரம் போன்ற திரைப்படங்களை கையில் வைத்துள்ளார்.மேலும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.


Click it and Unblock the Notifications