விஜய் சேதுபதி சொல்லும் வாழ்க்கை பாடம்.. கோடி கணக்கில் கடன் இருந்தும் கூலா பேசுறாரே.. வேற லெவல்

சென்னை: விஜய் சேதுபதி தற்போது மிஷ்கின் இயக்கத்தில் ட்ரெய்ன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடந்துவருகின்றன. அவரது நடிப்புக்கு எப்படி பலரும் ரசிகர்களாக இருக்கிறார்களோ அதேபோல் அவர் பேசும் விஷயங்களுக்கும், விதத்துக்கும் ரசிகர்களாக இருக்கிறார்கள். இந்நிலையில் கடன் பற்றி அவர் பேசியிருக்கும் விஷயம் அனைவரையும் ரசிக்க வைத்திருக்கிறது.

விஜய் சேதுபதி இப்போது பிடித்திருக்கும் இடத்துக்கு சாதாரணமாக வந்துவிடவில்லை. ஏகப்பட்ட விமர்சனங்கள், புறக்கணிபுகளை எல்லாம் கடந்துதான் வந்தார். அதனால் அவருக்கு வாழ்க்கையில் அனுபவங்கள் நிறைய கிடைத்திருக்கின்றன. அதன் காரணமாகத்தான் என்னவோ அவர் பேசுவது எல்லாமே தத்துவம் போல் இருக்கிறது. தான் பேசும் விஷயத்தை பக்குவமாகவும், தெளிவாகவும் பேசுவதில் சேது எப்போதுமே வல்லவர்தான்.

ரஜினியும் விரும்பினார்: நடிகர்களில் ரஜினியின் பேச்சு அனைவரையும் கவரக்கூடியது. அவரது பேச்சு ஆன்மீக ரீதியாகவும், நிறைய தத்துவங்களை கொண்டும் இருக்கும். அப்படிப்பட்ட ரஜினியே பேட்ட படத்தில் பணியாற்றியபோது விஜய் சேதுபதியின் பேச்சையும், வாழ்க்கையை அவர் பார்க்கும் விதத்தையும் வியந்து பாராட்டினார். அதனை ஆடியோ வெளியீட்டு விழா மேடையிலேயே வெளிப்படுத்தவும் செய்தார்.

Vijay Sethupathi Opens Up About Debit I ve Never Lived Without It I ve Learned to Live With It
Photo Credit:

ஆழ்ந்த பார்வைதான்: சேதுபதி எந்த விஷயத்தையும் ஆழ்ந்து பார்க்கக்கூடியவர். ஒரு பத்திரிகை நடத்திய விழா மேடையில் மலைகள் சுரண்டப்படுவதை பற்றி பேசிய விதத்திலிருந்தே தெரிந்துகொள்ளலாம் தான் வாழும் சமூகத்தில் அத்தனை நல்லவை மீதும் அவர் அக்கறை கொண்டிருக்கிறார் என்று. அதேபோல் இன்னொரு பேட்டியில், சாதி, மதம், அரசியல்வாதிகள் பற்றி நெற்றிப்பொட்டில் அடித்தது மாதிரி கூறியதும் கவனத்தை ஈர்த்தது.

கடன் பற்றி விஜய் சேதுபதி: இந்நிலையில் சமீபத்தில் விழாவில் வாழ்க்கையில் தான் கற்றுக்கொண்ட பாடம் பற்றி பேசினார். அவர் பேசுகையில், "எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் அதற்கேற்ற பிரச்னை இருக்கும். நான் ஆயிரத்தில் சம்பாதித்தபோதும், லட்சத்தில் சம்பாதித்தபோதும் பிரச்னை இருந்தது. தற்போது கோடிகளில் சம்பாதிக்கிறேன். ஆனாலும் அந்தப் பிரச்னை இருக்கத்தான் செய்கிறது. கடன் இருக்கிறது. கடன் இல்லாமல் நான் இருந்ததே இல்லை. நானும் இருக்கிறேன். அதுவும் இருக்கிற்து. அதனால் அதனுடன் வாழ்வதற்கு கற்றுக்கொண்டேன்" என்றார்.

சேதுவின் படங்கள்: முன்னதாக அவரது கரியரை பொறுத்தவரை கடைசியாக நடித்த ஏஸ், மகாராஜா ஆகிய படங்களில் மகாராஜா ஹிட்டடித்தது. தற்போது மிஷ்கின் இயக்கத்தில் ட்ரெய்ன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். முதன்முறையாக மிஷ்கினுடன் சேது சேர்ந்திருப்பதால் இரண்டு பேரும் நிச்சயம் திரையில் ஒரு மேஜிக்கை நிகழ்த்துவார்கள் என்ற நம்பிக்கையை கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X