Vijay Sethupathi: 8 நாள் சூட்டிங்ன்னு சொன்னாங்க.. இப்ப 100 நாட்கள் நடிச்சாச்சு.. விஜய் சேதுபதி ஓபன்!

சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான விடுதலை படத்தின் தொடர்ச்சியாக தற்போது விடுதலை 2 படம் உருவாகி வருகிறது. கடந்த முதல் பாகத்தில் சூரி கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு படம் வெளியானது. இந்த படத்தில் வாத்தியார் என்ற கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். அவருக்கு படத்தில் காட்சிகளும் மிகவும் குறைவாகவே அமைந்திருந்தது. இந்நிலையில் தற்போது உருவாகி வரும் இரண்டாவது பாகத்தில் விஜய் சேதுபதிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு படம் உருவாகி வருவதாக கூறப்பட்டுள்ளது. அவருக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் இணைந்துள்ளார்.

விடுதலை 2 படத்தின் ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் விஜய் சேதுபதியை இளமையாக காட்ட டீ-ஏஜிங் தொழில்நுட்பத்தை வெற்றிமாறன் பயன்படுத்த உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ஷூட்டிங் கடினமான கரடு முரடான இடங்களில் நடத்தப்பட்டு வருவதாகவும் படத்தின் சூட்டிங் தாமதமாவதற்கு இதுவும் ஒரு காரணம் என்றும் அவர் பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ளார். தான் முதலில் இந்த படத்திற்காக 8 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்ததாகவும் தற்போது 100 நாட்களை தாண்டி தான் நடித்து வருவதாகவும் இதன்மூலம் தன்னுடைய கேரக்டரின் முக்கியத்துவம் ரசிகர்களுக்கு தெரியவரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Vijay Sethupathi opens up about his character in Viduthalai 2 movie

விடுதலை படம்: இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 31ம் தேதி விடுதலை படம் வெளியானது. எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகி இருந்தது. இந்தப் படத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானிஸ்ரீ, சேத்தன் உள்ளிட்ட நடிகர்கள், நடிகைகள் நடித்திருந்தனர். படம் வெற்றிமாறன் இயக்கத்தில் அழுத்தமான கதைக்களத்துடன் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து மாஸ் ஹிட் கொடுத்தது. முதல் பாகத்தின் போதே இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தின் ஷூட்டிங்கையும் நடத்தி வந்தார் வெற்றிமாறன்.

நடிகர் விஜய் சேதுபதி: இந்நிலையில் மாதங்களை கடந்து விடுதலை 2 படத்தின் ஷூட்டிங் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஜனவரி மாதத்திலேயே இந்த படத்தின் சூட்டிங் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்னும் ஒரு மாத காலம் சூட்டிங் நீடிக்க உள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. வாத்தியார் என்ற கேரக்டரில் விஜய் சேதுபதி முதல் பாகத்தில் நடித்திருந்தார். முதல் பாகத்தில் இவருக்கு காட்சிகள் மிகவும் குறைவாகவே இருந்தன ஆனால் தற்போது உருவாகி வரும் இரண்டாவது பாகத்தில் இவருக்கு அதிகமான காட்சிகள் இருப்பதாகவும் இவருக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் இணைந்துள்ளதாகவும் படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதிக்கு டீ-ஏஜிங்: மேலும் விஜய் சேதுபதியின் ஃபிளாஷ்பேக் காட்சிகளுக்காக அவருக்கு டீ-ஏஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளதாகவும் படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இளையராஜா இசையில் முதல் பாகத்தின் பாடல்கள் அனைத்தும் அதிகமான வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றிருந்தன. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாவது பாகம் குறித்து விஜய் சேதுபதி பேட்டி ஒன்றில் வெளிப்படுத்தியுள்ளார். இந்த படத்தில் முதலில் எட்டு நாட்கள் மட்டுமே ஷூட்டிங் என தான் கமிட்டானதாகவும் ஆனால் தற்போது 100 நாட்களை கடந்து இந்தப் படத்தில் தான் நடித்து விட்டதாகவும் தொடர்ந்து நடித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதன்மூலம் தன்னுடைய கேரக்டரின் வலிமையை தெரிந்துக் கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சூட்டிங் தாமதம் இல்லை: விடுதலை 2 படம் மிகச் சிறப்பாக உருவாகி வருவதாகவும் இந்த படம் தாமதம் என்று கூறுவது சரியாக இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது படப்பிடிப்பு கடினமான இடங்களில் நடந்து வருவதாகவும் இந்த இடங்களில் படப்பிடிப்பு நடத்துவது அதிகமான நேரத்தை எடுத்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முதல் பாகத்தின் தொடர்ச்சியாகவே இரண்டாவது பாகம் உருவாகியுள்ளதாகவும் இந்த படம் முதல் பாகத்தில் ரசிகர்களின் கேள்விகள் அனைத்திற்கும் விடையாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏக்கத்தில் விஜய் சேதுபதி: படத்தின் சூட்டிங் சிறுமலைக்காடு போன்ற இடங்களில் ஷூட் செய்யப்பட்டதாகவும் வழியில் விஷப்பாம்பு எல்லாம் இருக்கும் என்று சொன்னதும் தான் துவக்கத்தில் பயந்ததாகவும் அவர் தன்னுடைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் தற்போது அந்த இடத்திற்கு மீண்டும் போக மாட்டோமா என்ற ஏக்கம் தனக்குள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அந்த அளவிற்கு இந்த படத்தின் ஷூட்டிங் நடந்த காடு மற்றும் அதன் சூழல் தன்னை மிகவும் கவர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X