பியானோ, கிட்டார் கற்கும் விஜய் சேதுபதி... இசையமைப்பாளர் ஆகிறார்!

புதிய படத்தில் இசையமைப்பாளராக நடிக்க இருக்கிறார் விஜய் சேதுபதி.

சென்னை: அறிமுக இயக்குநர் ரோகநாத் வெங்கட் கிருஷ்ணா இயக்கத்தில் இசையமைப்பாளராக நடிக்க இருக்கிறார் விஜய் சேதுபதி.

தொடர்ந்து வித்தியாசமான வேடங்களில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. விரைவில் அவர் நடித்த 'செக்கச் சிவந்த வானம்', சீதக்காதி', '96', 'சூப்பர் டீலக்ஸ்' உள்ளிட்ட படங்கள் ரிலீசாக இருக்கின்றன.

Vijay Sethupathi to play a musician in his next

இவை தவிர கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிக்கு வில்லனாக பேட்ட படத்திலும் நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து விஜய் சந்தர் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில், புதிய படமொன்றில் இசையமைப்பாளராக நடிக்க இருக்கிறார் விஜய் சேதுபதி. இப்படத்தை அறிமுக இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்குகிறார். இவர் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.

இப்படத்தின் கதைக்களம் இசையைப் பற்றியும் சர்வதேச அளவில் நடந்துவரும் ஒரு பிரச்னை குறித்தும் பேச இருக்கிறது. இதில் இசைக் கலைஞராக விஜய்சேதுபதி நடிக்க இருக்கிறார். இதற்காக, பியானோ, கிட்டார் போன்ற இசைக்கருவிகளை இசைக்க அவர் கற்று வருகிறார்.

இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு இரண்டு நாயகிகள் எனக் கூறப்படுகிறது. அதில் ஒருவர் வெளிநாட்டுப் பெண். மற்ற விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X