பாதி மொட்டையுடன் மகிழினி பாப்பா.. விஜய் சேதுபதி எப்படி தூக்கிப்போட்டு விளையாடுறாரு பாருங்க.. வீடியோ!
சென்னை: மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு மகராஜா படத்தைத் தொடர்ந்து தலைவன் தலைவி திரைப்படமும் வெற்றிப் படமாக மாறியுள்ளது. பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான தலைவன் தலைவி திரைப்படத்தில் பாதி மொட்டைத் தலையுடன் படம் முழுவதும் குட்டிப் பாப்பா ஒன்று நடித்து அசத்தியிருக்கும். அதை தூக்கிப் போட்டு செட்டில் விஜய் சேதுபதி விளையாடும் வீடியோ வெளியாகி உள்ளது.
விஜய் சேதுபதிக்கும், நித்யா மேனனுக்கும் இந்த ஆண்டு ஒரு தேவையான வெற்றியை தலைவன் தலைவி படம் கொடுத்துள்ளது. 6 நாட்களில் 31 கோடிக்கும் மேல் படம் வசூல் செய்துள்ளதாக Sacnilk வெப்சைட் தெரிவித்துள்ளது.

படத்தை தயாரித்த சத்யஜோதி நிறுவனத்துக்கு நல்ல லாபம் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இந்த வாரம் பல சிறிய படங்கள் வெளியானாலும், தலைவன் தலைவி திரைப்படம் தான் தொடர்ந்து இந்த வார விடுமுறையிலும் கலெக்ஷனை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாதி மொட்டையுடன்: இயக்குநர் பாண்டிராஜ் குழந்தைகளை வைத்து காட்சிகளை வடிவமைப்பதில் பலே பாண்டியா தான் என்பதை அவரது முதல் படமான பசங்க படத்திலேயே நிரூபித்து இருப்பார். குழந்தைகளின் போர்ஷன் அந்தளவுக்கு சிறப்பாக இருக்கும். அதையெல்லாம் தூக்கிச்சாப்பிடுவது போல ஒரு நடிப்பை இந்த பிஞ்சுக் குழந்தை தலைவன் தலைவி படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனனை விட பெஸ்ட்டாக செய்து மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறது.
தூக்கிப் போட்டா போட்டுடணும்: மகிழினி பாப்பாவை விஜய் சேதுபதி கையில் வைத்துக் கொண்டு உதவி இயக்குநர் ஒருவரிடம் தூக்கிப் போட்டு விளையாடும் வீடியோவை நடிகை ரஞ்சனா நாச்சியார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். தூக்கிப் போட்டா போட்டுடணும் என விஜய் சேதுபதி சொல்லி, பாப்பாவை தூக்கிப் போட்டு விளையாடுகிறார். அருகே பாப்பாவை கேட்ச் பிடிக்கும் நபர் விஜய் சேதுபதி கைக்கே வந்து கொடுக்க அவர் இப்படி சொல்கிறார்.
செம க்யூட்டா சிரிக்குதே: படம் முழுவதும் பாதி மொட்டை போட்டு அப்படியே விட்டுட்டாங்களேன்னு குழந்தை அழுதது போல தெரியவே இல்லை. ஷூட்டிங் ஸ்பாட்டில் மட்டுமின்றி ஆடியோ வெளியீட்டு விழா உள்ளிட்டவற்றிலும் நித்யா மேனன் மற்றும் விஜய் சேதுபதியிடம் அந்தளவுக்கு பாசமாக அந்த குழந்தை ஒட்டிக் கொண்டிருப்பதை பார்க்கவே சந்தோஷமாக உள்ளது. விஜய் சேதுபதி தூக்கிப் போட்டு விளையாடும் போது கூட பயப்படாமல், அது க்யூட்டாக சிரிப்பது அவ்வளவு அழகு.
பாப்பா மைண்ட் வாய்ஸ்: "அடேய் ரெண்டு பேரும் என்னோட உசுரோட விளையாடுறீங்களே" என பாப்பா மைண்ட் வாய்ஸ் இருக்கும் என ரசிகர்கள் இந்த வீடியோவுக்கு கீழே கமெண்ட் செய்து வருகின்றனர். பாப்பாவை பாதி மொட்டையுடன் விட்டது கடைசி வரைக்கும் ஜீரணிக்கவே முடியல என்றும் அதன் இயல்பான சிரிப்பு நிச்சயம் அனைவரையும் கவர்ந்து விட்டது என்றும் இந்த பாப்பாவுக்காகவே 2 முறை தலைவன் தலைவி படத்தை பார்க்க தியேட்டருக்குப் போனேன் என எகப்பட்ட ரசிகர்கள் கமெண்டுகளையும் எமோஜிக்களையும் குவித்து வருகின்றனர். அடுத்த வாரம் கூலி திரைப்படம் வரும் வரை தலைவன் தலைவி படம் பாக்ஸ் ஆபீஸில் கல்லா கட்டும் என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











