என்னது அதுக்குள்ள 3 வருஷம் ஆயிடுச்சா... போஸ்ட் போட்ட விஜய் சேதுபதி!
சென்னை : விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் கடந்த 2018 அக்டோபர் 4ம் தேதி வெளியான படம் 96.
Recommended Video
ஒளிப்பதிவாளரான பிரேம்குமார் இந்தப் படத்தின்மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
இந்நிலையில் படம் வெளியாகி 3 ஆண்டுகள் கொண்டாட்டத்தை படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர்.

விஜய் சேதுபதியின் 96 படம்
நடிகர் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் கடந்த 2018 அக்டோபர் 4ம் தேதி வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான படம் 96. பள்ளிக் காதலை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்த இந்தப் படம் பலரது காதல் நினைவுகளை தட்டி எழுப்பியது. ஒளிப்பதிவாளரான பிரேம்குமார் இந்தப் படத்தின்மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

ரசிகர்களை கவர்ந்த இசை
கோவிந்த் வசந்தா இசையில் பாடல்கள், பின்னணி இசை அனைத்தும் அனைவரையும் கவர்ந்திருந்தது. படத்தின் வெற்றியை அடுத்து தெலுங்கு, கன்னட மொழிகளில் இந்தப் படம் ரீமேக் செய்யப்பட்டது. ராம் மற்றும் ஜானகி கதாபாத்திரங்களை தங்களது வாழ்க்கையில் ரசிகர்கள் இணைத்து பார்த்தது படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

வெற்றியை எதிர்பார்க்கவில்லை
தனக்குள்ளும் ஒரு ராம் இருந்ததாகவும் அதை தொட்டதால்தலான் அந்தப் படத்தில் இயல்பாக நடிக்க முடிந்தததாகவும் விஜய் சேதுபதி ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் இந்தப் படம் இந்த அளவிற்கு வெற்றிப் பெறும் என்று தான் கருதவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

3 ஆண்டு நிறைவு
இந்நிலையில் படத்தின் 3 ஆண்டு நிறைவை படக்குழுவினர் இன்றைய தினம் கொண்டாடி வருகின்றனர். இப்பொழுது பார்த்தாலும் புது ஃபீலை கொடுக்கும் படமாக அமைந்துள்ள இந்தப் படத்தின் 3 ஆண்டு நிறைவையொட்டி படத்தின் நாயகன் விஜய் சேதுபதியும் தனது ட்விட்டர் பக்கத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விஜய் சேதுபதிக்கு முக்கியமான படம்
விஜய் சேதுபதிக்கு மட்டுமின்றி த்ரிஷாவுக்கும் இந்தப் படம் அவர்களது சினிமா கேரியரில் மிகவும் முக்கியமான படமாக அமைந்தது. இருவரும் தங்களது முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர். இவர்கள் இருவரை சுற்றியே கதை நகர்ந்தாலும் ரசிகர்களுக்கு அலுப்பை ஏற்படுத்தாத வண்ணம் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்ததே படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம்.


Click it and Unblock the Notifications











