எமோஷனல் பிளாக்மெயில் செய்கிறார்கள்.. இனி அப்படி நடிக்கவே மாட்டேன்.. உறுதி எடுத்த விஜய் சேதுபதி
சென்னை: விஜய் சேதுபதி தமிழ் மற்றும் ஹிந்தியில் மிகச்சிறந்த நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். நடித்தால் ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்காமல் கதைக்கு தேவைப்பட்டால் வில்லனாகவும் நடித்தார். ஆனாலும் அவர் தொடர்ந்து ஹீரோவாக மட்டும்தான் நடிக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கோரிக்கை வைத்ததை அடுத்து இனி ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என்று கூறியிருக்கிறார். அப்படி அவர் நடித்த மகாராஜா படம் பெரும் வசூல் வேட்டையை நடத்தியிருக்கிறது.
கோலிவுட்டின் டாப் 10 ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் விஜய் சேதுபதி. ஹீரோவாக மட்டுமின்றி வில்லனாகவும் அவர் கலக்கிவருகிறார். ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் தமிழ் சினிமாவில் தலைக்காட்டிக்கொண்டிருந்த அவர்; தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் கலக்கினார். அதன் பலனாக கோலிவுட்டில் மட்டுமின்றி பாலிவுட்டுக்கும் சென்று தனது வெற்றிக்கொடியை நாட்டியிருக்கிறார். பாலிவுட்டில் அவர் நடித்த ஃபர்ஸி வெப் சீரிஸ், மெரி கிறிஸ்துமஸ், ஜவான் ஆகிய படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன.

மகாராஜா: தொடர்ந்து வில்லனாகவே நடித்துவந்ததால் அவர் ஹீரோ என்பதையே மறந்துவிட்டாரா என்று அவரது ரசிகர்கள் கவலையடைந்தனர். ஆனால் அவர்களது கவலையை போக்கும் விதமாக மீண்டும் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்தவகையில் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் மகாராஜா படத்தில் நடித்தார் விஜய் சேதுபதி. சமீபத்தில் வெளியாகி படம் சூப்பர் ரெஸ்பான்ஸை பெற்றிருக்கிறது. விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் சக்கைப்போடு போடுகிறது.
விஜய் சேதுபதி பேட்டி: இந்நிலையில் விஜய் சேதுபதி சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், "கேமியோ வேடங்களில் இனி நடிக்க வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறேன். அப்படி நான் நடிப்பதால் அதன் அருமை பலருக்கும் தெரிவதில்லை. நம்மை எப்படி நடத்த வேண்டும் என்றும் அவர்களுக்கு தெரியவில்லை. சிலர் எளிமையாகவும், சிலர் அசால்ட்டாகவும் கேட்கிறார்கள். அப்போதெல்லாம் நாம் முடியாது என்று சொல்லிவிட்டால் உடனே எமோஷனல் பிளாக் மெயில் செய்கிறார்கள்.
நேரம் ஒதுக்க முடியவில்லை: சொந்த வாழ்க்கைக்கு ஏற்கனவே நேரம் ஒதுக்க முடியவில்லை. கேமியோ ரோலில் நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டால் 'கதையை கேட்டுவிட்டு சொல்லுங்கள்' என உரிமையாக சண்டை போடுகிறார்கள். மற்ற நடிகர்கள் கேமியோ வேடத்தில் நடிக்க ஒத்துக்கொள்வதில்லை. அதனால்தான் என்னிடம் வருகிறார்கள். முடியாது என்று சொன்னால் கோபித்துக் கொள்கிறார்கள். நடிக்கவே முடியாது என்று சொல்லும் நடிகர்களிடம் இவர்கள் எந்த வருத்தமும் படுவதில்லை" என்றார்.
மகன் ஹீரோ: விஜய் சேதுபதி இப்போது மிஷ்கின் இயக்கத்தில் ட்ரெய்ன் படத்திலும் நடிக்கிறார் . இதற்கிடையே அவரது மகன் சூர்யாவும் ஹீரோவாக அறிமுகமாகிறார். சண்டை பயிற்சியாளர் அனல் அரசு இயக்கும் ஃபீனிக்ஸ் படத்தில்தான் அவர் ஹீரோவாக அறிமுகமாகிறார். இதுதொடர்பான அறிவிப்பு வந்தபோது பலரும் ஆச்சரியப்பட்டார்கள். மேலும் சூர்யாவின் பேச்சை வைத்து பலரும் விமர்சிக்கவும் செய்தார். ஆனால் படத்தின் ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் சூர்யாவின் நடிப்பை பாராட்டவே செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











