200 கோடி, 1000 கோடியா?.. எங்க கஷ்டம் உங்களுக்கு புரியாது.. திடீரென எமோஷனலான விஜய்சேதுபதி!
சென்னை: குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள மகாராஜா திரைப்படம் இந்த வாரம் திரைக்கு வருகிறது. இந்த படம் விஜய் சேதுபதியின் 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் இந்த படத்தின் புரமோஷன் துபாயில் விஜய் சேதுபதி நடத்தினார். புர்ஜ் கலிஃபாவில் மகாராஜா கம்பீரமாக மின்னிய காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. அதே துபாயில் ஒரு காலத்தில் பாத்ரூம் கழுவும் வேலையை செய்து வந்ததாகவும் விஜய்சேதுபதி உருக்கமாக பேசியிருந்தார்.

தொடர்ந்து மகாராஜா படத்திற்கான புரமோஷன் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சிகளை விஜய் சேதுபதி நடத்தி வரும் நிலையில், சமீபத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் பத்திரிக்கையாளர் ஒருவர் நீங்க 200 கோடி, 1000 கோடி வெற்றியை எல்லாம் பார்த்துட்டீங்க என பேசியபோது விஜய் சேதுபதி எமோஷனலாகி பேசியது பரபரப்பை கிளப்பியது.
பெரிய நம்பிக்கை: விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து சமீபத்தில் வெளியான பல படங்கள் தொடர்ந்து வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை. விஜய் சேதுபதி வில்லனாக நடித்த படங்கள் வெற்றி பெற்ற ஒரு நிலையில், வில்லனாக இனிமேல் தொடர மாட்டேன் என்றும் ஹீரோவாக நடிப்பேன் என்றும் விஜய் சேதுபதி பேசியிருந்தார். தனது 50-வது படமான மகாராஜா படத்தின் மீது மிகுந்த நம்பிக்கையும் எதிர்பார்ப்பையும் கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி.
கடின உழைப்பு: புதுப்பேட்டை, நான் மகான் அல்ல, சுந்தரபாண்டியன் உள்ளிட்ட படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி பீட்சா படத்தில் ஹீரோவான நிலையில், தொடர்ந்து கடினமாக உழைத்து குறுகிய காலத்தில் 50 படங்களில் நடித்து முடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் விஜய் சேதுபதி நடித்து அசத்தியுள்ளார்.
200 கோடி, 1000 கோடியா: சமீபத்தில் நடைபெற்ற மகாராஜா படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் விஜய் சேதுபதி பார்த்து பத்திரிகையாளர் ஒருவர் 200 கோடி, 1000 கோடி வசூல் படங்களில் எல்லாம் நடித்துள்ளீர்கள் என மாஸ்டர், ஜவான் உள்ளிட்ட படங்களை மனதில் வைத்து கேள்வி எழுப்பினார். அதற்கு உடனடியாக பதில் அளித்த விஜய் சேதுபதி, 200 கோடி, 1000 கோடி எல்லாம் நான் பார்க்கலைங்க இங்க பல படத்துக்கு அட்வான்ஸை தவிர வேறு எதுவுமே வாங்காமல் நடித்துக் கொடுத்து வருகிறேன். சம்பளம் கூட சிலர் சரியாக கொடுப்பது இல்லை. ஆனால், தயாரிப்பாளர்கள் ரொம்பவே கஷ்டப்பட்டு படம் எடுப்பதால் அவர்களின் நிலைமையை புரிந்துக் கொண்டு பெரிதாக எதையும் கண்டு கொள்வதில்லை எனக் கூறியுள்ளார்.
இயக்குநராக ஆசை: நடிகராகவும் தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ள விஜய்சேதுபதி கூடிய விரைவில் இயக்குநராகவும் ஆவேன் என்றும் கூறியுள்ளார். படம் இயக்குவது தனக்கு ரொம்பவே பிடித்த ஒரு விஷயமாக மாறி வருகிறது. விரைவில் அதற்கான முயற்சிகளை மேற்கொள்வேன் என்றும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











