விஜய் சேதுபதியின் மனைவியாகவே வாழ்ந்த நித்யா மேனன்.. ரியல் மனைவிக்கு வந்ததே கோபம்.. யாரு சொன்னா?

சென்னை: பசங்க பட்த்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பாண்டிராஜ் முதல் படத்திலேயே தேசிய விருதை வென்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். வம்சம், மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, பசங்க 2, இது நம்ம ஆளு, கதகளி, கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டுப் பிள்ளை என தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து வந்தார்.

கடைசியாக சூர்யா, பிரியங்கா மோகனை வைத்து அவர் 2022ம் ஆண்டு இயக்கிய எதற்கும் துணிந்தவன் திரைப்படம் படுதோல்வியை சந்திக்க ஏகப்பட்ட ட்ரோல்களில் சிக்கினார். அதன் பின்னர், அவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள தலைவன் தலைவி படம் வரும் ஜூலை 25ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக காத்திருக்கிறது.

Vijay Sethupathi reveals how his wife got possessive after watching Nithya Menen performance

சமீபத்தில், நடைபெற்ற அந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் விழாவில் விஜய் சேதுபதிக்கும் பாண்டிராஜுக்கும் ஏற்பட்ட சண்டை குறித்து இருவரும் வெளிப்படையாக பேசியது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. மேலும், நித்யா மேனனால் தனது வீட்டில் வெடித்த சண்டை குறித்தும் விஜய் சேதுபதி பேசியிருக்கிறார்.

ஆகாச வீரனாக விஜய் சேதுபதி: பாண்டிராஜ் படங்கள் என்றாலே மண் மணம் மாறாமல் ஏகப்பட்ட குடும்ப உறவுகளை கனெக்ட் செய்யும் விதமாக படங்கள் உருவாகும். கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டுப் பிள்ளை படங்கள் எல்லாம் ரசிகர்கள் பலரையும் வெகுவாக கவர்ந்தது. இந்த படத்தில் விஜய் சேதுபதி ஆகாச வீரனாகவும் நித்யா மேனன் அவருக்கு மனைவியாக பேரரசி எனும் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

மனைவியே காண்டாகிட்டாங்க: தலைவன் தலைவி படத்தில் இடம்பெற்ற "பொட்டல முயலே" பாடல் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ள நிலையில், இந்த படத்தில் நித்யா மேனன் உடன் விஜய் சேதுபதிக்கு வேறலெவலில் கெமிஸ்ட்ரி வொர்க்கவுட் ஆகியிருப்பதை பலரும் பார்த்து ஆச்சர்யமடைந்து வருகின்றனர். இந்நிலையில், இந்த படத்தில் நாங்க ரெண்டு பேரும் நடிக்கல, கணவன், மனைவியாக வாழ்ந்திருக்கோம். அது எந்தளவுக்குன்னா எங்க ரெண்டு பேரோட ஜோடி பொருத்தத்தை பார்த்து என் மனைவி ஜெஸ்ஸியே காண்டாகிவிட்டார். எங்களுக்குள்ள வீட்டில் ரியலாவே சண்டை வந்துடுச்சுன்னா பார்த்துக்கோங்க என மேடையில் விஜய் சேதுபதி வெளிப்படையாக பேசியது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

சண்டை புரமோஷன்: தலைவன் தலைவி படத்துக்கு ஒரே சண்டையை வைத்தே புரமோஷன் செய்கிறதே படக்குழு என்றும் பலரும் கிண்டல் செய்து வருகின்றனர். ஆரம்பத்தில், பாண்டிராஜுக்கும் விஜய் சேதுபதிக்கும் வெடித்த சண்டையெல்லாம் சரியாகி இருவரும் நட்பாக மாறி இந்த படத்தை ஒரு வழியாக முடித்து ரிலீஸுக்கு கொண்டு வந்துள்ளனர்.

2 பேருக்கும் கைகொடுக்குமா?: இந்த ஆண்டு நித்யா மேனன் ரவி மோகனுடன் இணைந்து கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் நடித்த காதலிக்க நேரமில்லை திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆனாலும், அந்த படத்தை தியேட்டருக்குச் சென்று பார்க்க ரசிகர்கள் ரெடியாக இல்லை. அதே போல, கடைசியாக விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஏஸ் திரைப்படமும் ஃபிளாப் ஆனது. இந்நிலையில், இருவருக்கும் தலைவன் தலைவி திரைப்படம் கம்பேக் கொடுக்குமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த ஆண்டு நித்யா மேனன் அடுத்து தனுஷுடன் இட்லி கடை என ஹாட்ரிக் அடிக்க காத்துக் கொண்டிருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X