நாளைக்கு சீதக்காதி ரிலீஸ்: இன்னைக்கு இப்படி சொல்லலாமா விஜய் சேதுபதி?
சென்னை: சீதக்காதி நாளை ரிலீஸாக உள்ள நேரத்தில் விஜய் சேதுபதி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள சீதக்காதி படம் நாளை ரிலீஸாக உள்ளது. படத்தில் பலர் நடித்திருந்தாலும் இது விஜய் சேதுபதி படம் என்றே பேசப்படுகிறது.
சீதக்காதி விஜய் சேதுபதிக்கு 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் இன்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விஜய் சேதுபதி
சீதக்காதி படத்தை தியேட்டரில் பார்க்கவும். படம் துவங்கி முதல் 40 நிமிடம் தான் நான் வருவேன் என்று உண்மையை சொல்லி மக்களை அழைத்துள்ளார் விஜய் சேதுபதி.

கவுரவத் தோற்றம்
படத்தில் 2 நிமிடம் வந்தாலே என்னால் தான் கிளைமாக்ஸ் மாறும், என்னால் தான் கதையில் திருப்பம் உண்டாகும் என்று கூறும் கலைஞர்களுக்கு மத்தியில் நான் 40 நிமிடம் தான் வருவேன் என்று உண்மையை சொல்லிய விஜய் சேதுபதியை பாராட்டியே ஆக வேண்டும்.
ஒரு நிமிடம்
விஜய் சேதுபதி சும்மா வந்துவிட்டு சென்றாலே அந்த படத்தை பார்ப்பார்கள் அவரின் ரசிகர்கள். அப்படி இருக்கும்போது 40 நிமிடங்கள் என்பது ஜாஸ்தி தான்.
நம்பிக்கை
சீதக்காதி படம் நிச்சயம் சூப்பர் ஹிட் ஆகும் என்பதில் விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு சந்தேகமே இல்லை.


Click it and Unblock the Notifications











