என் வாயில் ஒருவர் சிறுநீர் கழித்தார்: விஜய் சேதுபதி

By Siva

Recommended Video

தான் நடித்த முதல் படத்தின் முதல் காட்சி குறித்து விஜய் சேதுபதி- வீடியோ

சென்னை: விஜய் சேதுபதி தான் நடித்த முதல் படத்தின் முதல் காட்சி குறித்து தெரிவித்துள்ளார்.

சுமார் மூஞ்சி குமாரான விஜய் சேதுபதி தனது திறமை மற்றும் கடின உழைப்பால் கோலிவுட்டின் முன்னணி நடிகராகியுள்ளார். அது மட்டும் அல்ல தனது நல்ல குணத்தால் ரசிகர்கள் கொண்டாடும் நபராக உள்ளார்.

அவரின் 25வது படமான சீதக்காதி நாளை ரிலீஸாகிறது.

ஹீரோ

ஹீரோ

விஜய் சேதுபதி கூத்துப்பட்டறையில் இருந்து வெளியே வந்த உடனே ஹீரோவாகிவிடவில்லை. கிடைத்த சிறு சிறு கதாபாத்திரங்களில் எல்லாம் நடித்து அதன் பிறகே ஹீரோவானார். தனுஷ் படத்தில் எக்ஸ்ட்ராவாக நடித்த விஜய் சேதுபதி இன்று ரஜினிக்கு வில்லனாக நடிக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளார்.

முதல் காட்சி

முதல் காட்சி

அனைத்து நடிகர்களுக்குமே தாங்கள் நடித்த முதல் படத்தின் முதல் காட்சி என்றுமே மறக்காது. விஜய் சேதுபதி நடித்த முதல் காட்சியை அவராலும் மறக்க முடியாது. ஆனால் அவர் நடித்த காட்சியில் நடிக்க எத்தனை பேர் ஒப்புக் கொண்டிருப்பார்கள் என்பது தான் தெரியவில்லை.

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

வர்ணம் என்ற படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதிக்கு வாய்ப்பு கிடைத்தது. முதல் படமான அதில் அவர் பின்தங்கிய வகுப்பை சேர்ந்தவராக நடித்தார். அவரின் முதல் காட்சி என்னவென்றால் அவரின் வாயில் ஒருவர் சிறுநீர் கழிப்பார். அந்த காட்சியில் நடித்து முடித்த பிறகு செட்டில் இருந்த அனைவரும் கை தட்டியதாக விஜய் சேதுபதி பிரபல நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

கைதட்டல்

கைதட்டல்

ஒரு நடிகனை ஊக்குவிப்பது கைதட்டல்களும், பாராட்டும் தான். வர்ணம் படத்தில் முதல் காட்சியில் நடித்த பிறகு கிடைத்த கைதட்டல்கள் தான் நம்மாலும் நடிக்க முடியும் என்ற நம்பிக்கையை விஜய் சேதுபதிக்கு கொடுத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X