விஜய் சேதுபதியின் யாதும் ஊரே யாவரும் கேளிர்... டிசம்பரில் வெளியீடு என அறிவிப்பு!
சென்னை : நடிகர் விஜய் சேதுபதி தொடர்ந்து சிறப்பான பல படங்களில் நடித்து வருகிறார்.
அவரது நடிப்பில் அடுத்ததாக யாதும் ஊரே யாவதும் கேளிர் படம் டிசம்பரில் ரிலீசாக உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
மிகுந்த பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தப் படம் நீண்ட நாட்களாக ரிலீசுக்காக காத்திருக்கிறது

நடிகர் விஜய் சேதுபதி
நடிகர் விஜய் சேதுபதி தொடர்ந்து சிறப்பான பல படங்களில் நடித்து வருகிறார். அடுத்தடுத்து அவரது நடிப்பில் படங்கள் ரிலீசாகி வருகின்றன. ரஜினி, விஜய்யை தொடர்ந்து அடுத்ததாக கமலுக்கும் விக்ரம் படம் மூலம் வில்லாகியுள்ளார் விஜய் சேதுபதி.

யாதும் ஊரே யாவரும் கேளிர் படம்
இந்நிலையில் அவரது நடிப்பில் அடுத்ததாக ரிலீசுக்கு தயராகியுள்ளது யாதும் ஊரே யாவரும் கேளிர் படம். இதுகுறித்து நேற்றைய தினம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ள விஜய் சேதுபதி, ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களையும் பகிர்ந்துள்ளார். போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
Recommended Video

வெங்கட கிருஷ்ணா ரோஹந்த் இயக்கம்
இயக்குநர் வெங்கட கிருஷ்ணா ரோஹந்த் இந்தப் படத்தை டைரக்ட் செய்துள்ளார். இவர் எஸ்பி ஜனநாதனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். சந்தரா ஆர்ட்ஸ் தயாரித்துள்ளது. படத்தில் மேகா ஆகாஷ், விவேக், இயக்குநர் மோகன்ராஜா, கரு பழனியப்பன், கனிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அரண்மனை 3 படத்திற்கு பிறகு விவேக் தன்னுடைய மறைவிற்கு முன்பு இந்தப் படத்திலும் நடித்துள்ளார்.

வரவேற்பை பெற்ற டீசர், ட்ரெயிலர்
சமீபத்தில் இந்தப் படத்தின் டீசர் மற்றும் ட்ரெயிலர் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் குறித்து தற்போது விஜய் சேதுபதி கொடுத்துள்ள அப்டேட்டால் அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.

நிவாஸ் கே பிரசன்னா இசை
படத்திற்கு இசையமைத்துள்ளார் நிவாஸ் கே பிரசன்னா. ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார் மகேஷ் முத்துசாமி, சதீஷ் சூர்யா எடிட்டிங்கை மேற்கொண்டுள்ளார். இந்தப் படம் ரிலீசுக்கு தயாராகி நீண்ட காலங்களாக பல்வேறு காரணங்களால் ரிலீஸ் தள்ளிப் போனது. இந்நிலையில் தற்போது படம் ரிலீஸ் குறித்து விஜய் சேதுபதி அப்டேட் தெரிவித்துள்ளார்.

படத்தின் ரிலீஸ் அறிவிப்பு
மாஸ்டர் படத்திற்கு பிறகு கடைசி விவசாயி, மாமனிதன், லாபம், லால் சிங் சாத்தா, யாதும் ஊரே யாவரும் கேளிர் உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வந்தார் விஜய் சேதுபதி. இதில் மாமனிதன், யாதும் ஊரே யாவரும் கேளிர் படங்கள் ரிலீசுக்கு தயாரான நிலையில் தற்போது யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் ரிலீஸ் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மிகுந்த பொருட்செலவு
இந்தப் படம் மிகுந்த பொருட்செலவில் உருவாகியுள்ளது. இந்நிலையில் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகுமா அல்லது ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படுமா என்பது குறித்த தகவல்களை விஜய் சேதுபதி தெரிவிக்கவில்லை. தற்போது அதிகமான படங்கள் திரையரங்குகளில் ரிலீசாகும் நிலையில், இந்தப் படமும் திரையரங்கில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











