கண்டிப்பாக ட்ரோல் செய்வார்கள்.. லோகேஷ் கனகராஜிடம் எச்சரித்த விஜய் சேதுபதி.. பயங்கர உஷார்

சென்னை: தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் ஃபேமஸான நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. இடையில் வில்லன் ரோல் மட்டும் செய்துகொண்டிருந்த அவர்; தனது ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று மீண்டும் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அப்படி அவர் நடித்த மகாராஜா திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அடுத்ததாக மிஷ்கின் இயக்கத்தில் ட்ரெய்ன் படமும், மணிகண்டன் இயக்கத்தில் முத்து என்கிற காட்டான் வெப் சீரிஸும் ரிலீஸாகவிருக்கின்றன. இந்நிலையில் அவர் கொடுத்த பேட்டி ஒன்று ட்ரெண்டாகியுள்ளது.

விஜய் சேதுபதி மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவராக தன்னை நிலை நிறுத்தியிருக்கிறார். ஆனால் இந்த நிலைக்கு அவர் வருவதற்கு பல வருடங்கள் கடுமையான உழைப்பை தொடர்ந்து சினிமாவில் போட்டுக்கொண்டே இருந்தார். அவர் சினிமாவுக்கு உண்மையாக உழைத்ததால் அவரையும் சினிமா கைவிடவில்லை. தொடர்ச்சியாக ஹிட் படங்களில் நடித்த அவர்; திடீரென வில்லன் ரோல்களிலும், கெஸ்ட் ரோல்களிலும் அதிகம் நடிக்க ஆரம்பித்தார். விக்ரம், பேட்ட, மாஸ்டர், ஜவான் என வரிசையாக வில்லன் ரோல் ஏற்றார்.

Vijay Sethupathi Says He Feared Trolls for His Intro Scene in Vikram
Photo Credit:

மீண்டும் ஹீரோ: ஆனால் இப்படியே போனால் அவ்வளவுதான் என அவரது ரசிகர்கள் எச்சரித்தார்கள். அதுமட்டுமின்றி மீண்டும் ஹீரோவாக நடிக்க வேண்டும் எனவும் வேண்டுக்கோள் வைத்தார்கள். அதனை ஏற்று நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் தனது 50ஆவது படமாக மகாராஜா படத்தில் கதாநாயகனாக ரீ என்ட்ரி கொடுத்தார். படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது. இந்தியாவில் மட்டுமின்றி சீனாவிலும் படத்துக்கு ஏகப்பட்ட ரெஸ்பான்ஸ். அதனைத் தொடர்ந்து நடித்த ஏஸ் படம் சுமார் ரகம்தான். கடைசியாக காந்தி டாக்ஸ் வெளியானது.

Also Read
விஜய்சேதுபதியின் 'முத்து என்கிற காட்டான்'.. ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
விஜய்சேதுபதியின் 'முத்து என்கிற காட்டான்'.. ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த படங்கள்: அடுத்ததாக அவர் நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ட்ரெய்ன் படம் வரவிருக்கிறது. கலைப்புலி எஸ். தாணு இப்படத்தை தயாரித்திருக்கிறார். முதன்முறையாக மிஷ்கினுடன் சேது இணைந்திருப்பதால் பெரிய எதிர்பார்ப்பை படம் சம்பாதித்திருக்கிறது. அதேபோல் காக்கா முட்டை மணிகண்டன் இயக்கத்தில் முத்து என்கிற காட்டான் வெப் சீரிஸும் ஹாட் ஸ்டாரில் மார் 27ஆம் தேதி ரிலீஸாகிறது. இந்த இரண்டு ப்ராஜெக்ட்டுகளும் அவருக்கு பெரிய பெயரை பெற்றுத்தரும் என நம்பப்படுகிறது.

அரசன் படத்தில் வில்லன்?: அவர் மீண்டும் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்துவிட்டாலும்; தனக்கு முக்கியத்துவம் இருந்தால் மற்ற ரோல்களையும் செய்துவருகிறார். அந்தவகையில் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகிவரும் அரசன் படத்திலும் கமிட்டாகியிருக்கிறார். இதில் அவர் வில்லன் கேரக்டரை ஏற்றிருக்கிறாரா இல்லை கேரக்டர் ரோலா என்பது அடுத்தடுத்த அப்டேட்டுகள் வரும்போது தெரியும். இந்நிலையில் சமீபத்தில் விஜய் சேதுபதி கொடுத்த பேட்டி ஒன்று கவனத்தை ஈர்த்திருக்கிறது.

விஜய் சேதுபதி பேட்டி: அவர் அளித்த பேட்டியில், "விக்ரம் படத்தில் எனது இன்ட்ரோ சீன் எடுத்தபோது, 'நான் ரொம்பவே குண்டாக இருக்கிறேன். அதனால் ரசிகர்கள் கண்டிப்பாக ட்ரோல் செய்வார்கள் என லோகேஷ் கனகராஜிடம் சொன்னேன். ஆனால் அந்த சீனை அப்படித்தான் எடுக்க வேண்டும் என லோகேஷ் ரொம்பவே உறுதியாக இருந்தார். அதேபோல் விக்ரம் வேதா படத்திலும் எனது இன்ட்ரொ சீன் விஜய், அஜித் ரேஞ்சில்; சாம் சி.எஸ் இசையுடன் நீளமாக இருக்கும். அதுவும் கண்டிப்பாக ஒர்க் அவுட் ஆகும் இயக்குநர்கள் உறுதியாக இருந்தார்கள்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X