விஜய் சேதுபதிக்கு பிடித்த கவர்ச்சி நடிகை யார் தெரியுமா?..காரணம் கேட்ட தொகுப்பாளர்..பல்பு கொடுத்த VJS

சென்னை: விஜய் சேதுபதி நடிப்பில் கடைசியாக விடுதலை 2 திரைப்படம் வெளியானது. வெற்றிமாறன் இயக்கியிருந்த அந்தப் படத்துக்கு கலவையான விமர்சனம் கிடைத்தது. அதேசமயம் விஜய் சேதுபதியின் நடிப்புக்கு பலத்த பாராட்டு கிடைத்தது. தற்போது அவர் மிஷ்கின் இயக்கத்தில் ட்ரெய்ன் படத்தில் நடித்துவருகிறார். சூழல் இப்படி இருக்க தனக்கு பிடித்த கவர்ச்சி நடிகை யார் என்று சேது பேசியிருப்பது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

சினிமாவில் ஏகப்பட்ட கஷ்டங்களை சந்தித்து தற்போது வளர்ச்சியடைந்திருப்பவர் விஜய் சேதுபதி. தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான அவர் ஒவ்வொரு படத்திலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திக்கொண்டே இருந்தார். முக்கியமாக நாளைய இயக்குநர்கள் நிகழ்ச்சியிலிருந்து வந்து திரைப்படம் இயக்கிய கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி உள்ளிட்டோருடன் இணைந்து மெகா ஹிட்டுகளை கொடுத்திருக்கிறார் இவர். இதனால் அந்த சமயத்தில் அவரது வளர்ச்சி அபரிமிதமாக இருந்தது.

vijay sethupathi silk smitha

கேரக்டர்தான் முக்கியம்: விஜய் சேதுபதியை பொறுத்தவரை ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்காதவர். கதையில் தன்னுடைய கேரக்டரை மட்டுமே பார்க்கக்கூடியவர். அதனால்தான் டாப் ஹீரோவாக இருக்கும்போதுகூட பேட்ட, மாஸ்டர், விக்ரம், ஜவான் உள்ளிட்ட படங்களில் வில்லனாக அவரால் நடிக்க முடிந்தது. அதேபோல் ஆரஞ்சு மிட்டாய், சீதக்காதி உள்ளிட்ட படங்களில் வித்தியாசமான ஹீரோவாக நடிக்க முடிந்தது. அவரது இந்த குணத்துக்காகவும் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹிந்தியில் அபூர்வம்: தமிழில் மட்டுமின்றி ஹிந்தியிலும் கலக்குகிறார் அவர். ஜவான் படத்தில் வில்லனாக நடித்த அவர்; ஃபர்ஸி வெப் சீரிஸில் முக்கியமான ரோலிலும், மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தில் ஹீரோவாகவும் நடித்தார். பொதுவாக இங்கிருந்து ஹிந்திக்கு செல்பவர்கள் அந்த மொழியை உடனே கற்றுக்கொண்டு டப்பிங் பேசுவதெல்லாம் அபூர்வத்திலும் அபூர்வம். அந்த அபூர்வத்தில் ஒருவர்தான் விஜய் சேதுபதி. தான் நடித்த ஹிந்தி படங்களில் எல்லாம் தனது சொந்த குரலிலேயே டப்பிங் பேசினார்.

மீண்டும் ஹீரோ: தொடர்ந்து வில்லன் ரோலில் நடித்துவந்த அவர் தற்போது மீண்டும் ஹீரோவாகியிருக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் வெளியான விடுதலை 2, மகாராஜா ஆகிய இரண்டு படங்களில் மகாராஜா மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. விடுதலை 2வுக்கு கலவையான விமர்சனம் கிடைத்தது. தற்போது மிஷ்கின் இயக்கத்தில் ட்ரெய்ன் படத்தில் நடித்துவருகிறார். இதற்கிடையே நடிப்பு மட்டுமின்றி தனது மனதில் பட்டதை ரொம்பவே கேஷுவலாக பேசக்கூடியவர். அது பிறரின் மனதை புண்படுத்தாத மாதிரிதான் இருக்கும். அதை பலரும் ரசிப்பார்கள்.

சில்க் ஸ்மிதாதான்: இந்நிலையில் தனக்கு பிடித்த கவர்ச்சி நடிகை குறித்து விஜய் சேதுபதி பேசியிருப்பது ட்ரெண்டாகியிருக்கிறது. 96 பட சமயத்தில் அவர், திரிஷா, இயக்குநர் பிரேம், இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா ஆகியோர் தனியார் சேனலில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள். அப்போது பேசிய விஜய் சேதுபதி, "பிடித்த கவர்ச்சி நடிகை யார் என்று என்னிடம் கேட்டால் எப்போதுமே சில்க் ஸ்மிதாதான்" என்றார். உடனே அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர், 'சில்க்கை ஏன் பிடிக்கும்' என்று கேட்டார். அதற்கு பதிலளித்த சேதுபதி, 'சில்க்கை ஏன் பிடிக்குமா?.. நீ96ல் பிறந்தவனா.. உனக்கு அவ்வளவுதான் தெரியும்' என்று ஓபனாக போட்டுடைத்துவிட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X