தக் லைஃப் படத்துக்கே 25 நாட்கள்.. ஏஸ் வந்ததே தெரியவில்லை.. விஜய் சேதுபதி வருத்தம்

சென்னை: ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த ஏஸ் திரைப்படம் கடந்த 23ஆம் தேதி வெளியானது. இதற்கு முன்னதாக அவர் நடித்த மகாராஜா படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. ஆனால் இந்தப் படமோ வந்ததும் தெரியவில்லை. படத்தை பார்த்தவர்களும் ஆஹா ஓஹோவென்றெல்லாம் படத்தை கொண்டாடவில்லை. இந்நிலையில் ஏஸ் படம் குறித்து விஜய் சேதுபதி செய்தியாளர்களிடம் பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.

விஜய் சேதுபதி கோலிவுட்டின் சிறந்த நடிகர்களில் ஒருவர். அவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் கலக்கிவருகிறார். இங்கு ஹீரோவாக மட்டும் நடிக்காமல் வில்லனாகவும் நடித்துவந்த அவர்; ஹிந்தியிலும் அதே ஃபார்முலாவை பின் தொடர்ந்தார். அதன் பலனாக ஃபர்ஸி வெப் சீரிஸும், ஜவான் திரைப்படமும் நல்ல ரிசல்ட்டை அவருக்கு கொடுத்தன. அதேசமயம் மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தில் பாசிட்டிவ்வான லீடு ரோலில் நடித்த அப்ளாஸை அள்ளினார்.

ரசிகர்களின் கோரிக்கை: அவர் என்னதான் வில்லனாக நடித்து மிரட்டினாலும் தொடர்ந்து ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கோரிக்கை வைத்துக்கொண்டே இருந்தார்கள். அவர்களது கோரிக்கைக்கு ஒருவழியாக செவி மடுத்த சேதுபதி மகாராஜா திரைப்படத்தில் ஹீரோவாக களமிறங்கினார். நித்திலன் சுவாமிநாதன் இயக்கியிருந்த அந்தப் படம்தான் விஜய் சேதுபதிக்கு 50ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. சூப்பர் எதிர்பார்ப்புடன் வெளியான படம் மெகா ப்ளாக் பஸ்டர்.

Vijay Sethupathi says people don t know that Ace movie has been released

கலக்கிய திரைக்கதை: படத்தில் பெரிதாக கவனிக்கப்பட்டது என்றால் நித்திலனின் ஸ்க்ரீன் பிளே. நான் லீனியர் ஸ்டைலில் எழுதப்பட்டிருந்த திரைக்கதையை எந்த வித சொதப்பலும் இல்லாமல் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்ததில் அனைவரது வாயையும் பிளக்க வைத்துவிட்டார். க்ளைமேக்ஸ் ட்விஸ்ட்டை எல்லாம் பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் வாயடைத்து போனார்கள். கண்டிப்பாக தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குநர்களில் அவர் இடம்பிடிப்பார் என்பதை மகாராஜா உணர்த்திவிட்டது.

சீனாவிலும் கலக்கல்: தமிழ்நாட்டில் மெகா ப்ளாக் பஸ்டர் ஆன மகாராஜா சீனாவிலும் சக்கைப்போடு போட்டது. அந்த நாட்டில் படம் பார்த்த ரசிகர்கள் கொண்டாடி தீர்த்துவிட்டார்கள். இதனால் அந்த நாட்டிலும் விஜய் சேதுபதிக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவாகிவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சூழல் இப்படி இருக்க ஆறுமுக குமார் இயக்கத்தில் தனது 51ஆவது படமான ஏஸ் படத்தில் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி.

Take a Poll

சுமாரான வரவேற்பு: இதில் அவருடன் பப்லு உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். மகாராஜா மெகா ஹிட்டானதன் காரணமாக இந்த படமும் அந்த ஃபார்மை தக்க வைக்கும் என்று சேதுவின் ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் படம் சுமாரான வரவேற்பை பெற்றது. விமர்சன ரீதியாகவும் சரி, வசூல் ரீதியாகவும் சரி பெரிய இம்பேக்ட் எதையும் க்ரியேட் செய்யவில்லை. இந்நிலையில் ஏஸ் படம் குறித்து விஜய் சேதுபதி செய்தியாளர்களிடம் பேசிய விஷயம் ஒன்று ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.

என்ன பேசினார்: அவர் பேசுகையில், "நான் நடித்த ஏஸ் திரைப்படம் வெளியானதே நிறைய பேருக்கு தெரியவில்லை என்பதுதான் உண்மை. அது எங்களுடைய தவறுதான். ஒத்துக்கொள்கிறோம்.ஒரு சில நெருக்கடிகளால் படத்தை உடனடியாக ரிலீஸ் செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டோம். இருந்தாலும் மக்களிடமிருந்து பாசிட்டிவ் விமர்சனம் வந்தது ஆறுதலாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. கமல்ஹாசன், சிம்பு போன்ற பெரிய நடிகர்கள் நடித்த தக் லைஃப் படத்தை விளம்பரப்படுத்தவே 25 நாட்கள் தேவைப்படுகின்றன" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X