அப்பா செம அடி அடிப்பாரு.. அம்மா தடுக்கவே மாட்டாங்க.. விஜய் சேதுபதி மகன் சூர்யா சொல்றதை கேளுங்க!
சென்னை: மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி நடித்துள்ள பீனிக்ஸ் வீழான் திரைப்படம் கடந்த ஆண்டு சூர்யாவின் கங்குவா படத்துடன் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதன் பின்னர், படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. இந்நிலையில், விரைவில் பீனிக்ஸ் வீழான் திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தனது அப்பா தன்னை எதற்காக அடித்தார் என்பது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
மேலும், ஆரம்பத்தில் தான் பேசும் போது ஏற்பட்ட ட்ரோல்களுக்கு நான் மட்டுமே பொறுப்பு என்றும் இன்னமும் புரியும்படி கன்வே செய்திருக்க வேண்டும் என ரொம்பவே மெச்சூராக பேசிய பேட்டி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

அப்பா விஜய் சேதுபதியுடன் இணைந்து சிந்துபாத் படத்தில் நடித்த சூர்யா சேதுபதி, ஹீரோவாக அறிமுகமாகவுள்ள திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், படத்தை புரமோட் செய்யும் விதமாக பேட்டிகளையும் கொடுத்து வருகிறார்.
படம் எப்போ ரிலீஸ்?: நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள பீனிக்ஸ் வீழான் திரைப்படம் வரும் ஜூலை 4ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தை ஸ்டன்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கியுள்ளார். வரலட்சுமி சரத்குமார், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். கடந்த ஒரு வருடமாக படத்தை வெளியிட போராடிக் கொண்டிருந்த சூர்யா சேதுபதி ஒருவழியாக அடுத்த மாதம் படத்தை வெளியிடவுள்ள நிலையில், புரமோஷனில் தற்போது பிசியாகி உள்ளார். கலாட்டா யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
என்னை விட மத்தவங்களுக்கு அதிக பிரச்னை: அப்பா வேற, நான் வேற என ஆரம்பத்தில் சூர்யா சேதுபதி பேசியதும் தனது பெயரை வெறும் சூர்யா என்று மட்டுமே பயன்படுத்தப் போவதாகவும் அறிவித்தது அவரை ஏகப்பட்ட ட்ரோல்களுக்கு ஆளாக்கியது. அதுதொடர்பான கேள்விக்கு, நான் ஒன்றும் தவறாக சொல்லவில்லை. ஆனால், இன்னமும் மற்றவர்களுக்கு புரியும்படி சொல்லியிருக்க வேண்டும் என்றார். என்னை விட எனக்கு முன்னாடி சினிமாவில் வந்த பல பிரபலங்களுக்கும் இதைவிட மோசமான ட்ரோல்கள் வந்தன. ஆனால், அதையெல்லாம் அவர்கள் கடந்து ஸ்டாராக இருக்க என்னவெல்லாம் செஞ்சிருக்காங்க என்பதை பார்த்து கத்துக் கொண்டு வருகிறேன் என்றார்.

அப்பா எதுக்கு அடிச்சாரு?: நடிகர் விஜய் சேதுபதி மகாராஜா பேட்டியின் போது, என்னோட மகளை நான் அடிக்கவே மாட்டேன். ஆனால், மகன் சூர்யாவை போட்டு வெளுத்து வாங்கிவிடுவேன் எனக் கூறியிருந்தார். இந்நிலையில், அப்பா உங்களை எதுக்கு அடிச்சாரு என்கிற கேள்விக்கு, ஒளிவு மறைவின்றி கராத்தே கிளாஸ், பாக்ஸிங் கிளாஸுக்கெல்லாம் போகச் சொல்வார், நான் போகமாட்டேன் என அடம்பிடிக்கும் போது அடி வெளுத்துவிடுவார் என்றார்.
தடுக்க மாட்டாங்க: அப்பா அடித்ததும் அம்மா ஓடோடி வந்து தடுத்து விடுவார்களா? என்கிற கேள்விக்கு, அப்படியெல்லாம் ஒரு நாளும் அவங்க தடுத்ததே கிடையாது. நல்லா அடி வாங்கட்டும் என வேடிக்கை பார்ப்பாங்க என செம ஜாலியாக பேட்டியளித்துள்ளார்.
16 மணி நேரம் கேம்: சிறு வயதில் தூங்கி எந்திரித்தால் போதும், அப்படியே கேம் ஆன் பண்ணிட்டு விளையாட ஆரம்பித்து விடுவேன். 16 மணி நேரம் எல்லாம் விடாமல் கேம் விளையாடி இருக்கேன். ஆனால், இப்போ அப்படி எல்லாம் கிடையாது. நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்பது மட்டுமே ஒரே இலக்காக உள்ளது என்றார்.


Click it and Unblock the Notifications











