சண்டைக் காட்சிகளுக்காக விஜய் சேதுபதி மகன் பட்ட கஷ்டத்தை பாருங்க.. வெளியானது பீனிக்ஸ் மேக்கிங் வீடியோ!
சென்னை: அனல் அரசு இயக்கத்தில் விஜய் சேதுபதி மகன் சூர்யா சேதுபதி நடித்த பீனிக்ஸ் வீழான் திரைப்படம் இந்த மாதம் திரையரங்குகளில் வெளியானது. ஆனால், அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் ரீதியாக வெற்றிப் பெறவில்லை. ஆனால், படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் ஒட்டுமொத்த உழைப்பையும் கொட்டி சூர்யா சேதுபதி நடித்த நடிப்பை பலரும் பாராட்டினர்.
இந்நிலையில், படத்தின் அசத்தலான மேக்கிங் வீடியோவை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வருடமே வாரிசுகளின் வருடமாக மாறிவிட்டது. அதர்வா தம்பி ஆகாஷ் முரளி நடித்த நேசிப்பாயா படத்தை மக்கள் பலரும் நேசிக்காத நிலையில், அந்த படம் பாக்ஸ் ஆபீஸில் ஃபிளாப் ஆனது.

அதன் பின்னர், தனுஷின் அக்கா மகன் பவிஷ் ஹீரோவாக நடிக்க தனுஷ் இயக்கிய நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படமும் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடிக்கவில்லை. மேலும், விஜய் சேதுபதி மகனின் பீனிக்ஸ், கடந்த வாரம் விஷ்ணு விஷால் தம்பி நடிப்பில் வெளியான ஓஹோ எந்தன் பேபி என வாரிசுகளின் படங்கள் எல்லாமே தியேட்டரில் ஒர்க்கவுட் ஆகவில்லை.
ஆரம்பத்தில் அப்படித்தான்: ஒரு சில பிரபலங்கள் மட்டுமே ஆரம்பத்திலேயே மிகப்பெரிய ஸ்டார் ஆகிவிடுவார்கள். நம்ம பிரதீப் ரங்கநாதன் போல. ஆனால், விஜய், விக்ரம், சூர்யா எல்லாம் ஏகப்பட்ட தோல்விகளையும் ட்ரோல்களையும் சந்தித்துத் தான் மிகப்பெரிய நடிகர்களாக மாறினர். அந்த வரிசையில் எதிர்காலத்தில் சூர்யா சேதுபதியும் வருவார் என்று பல பிரபலங்களும் அவர் பபுல்கம் சர்ச்சையில் சிக்கிய பின்னர் சப்போர்ட்டாக பேசினர்.
பீனிக்ஸ் மேக்கிங் வீடியோ: சண்டை பயிற்சி இயக்குநரான அனல் அரசு இயக்கத்தில் சூர்யா சேதுபதி, வரலட்சுமி சரத்குமார், சம்பத்ராஜ், அபி நக்ஷத்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ள பீனிக்ஸ் வீழான் திரைப்படம் ஜூலை 4ம் தேதி வெளியானது. 3பிஹெச்கே, பறந்து போ உள்ளிட்ட படங்களுடன் வெளியான இந்த படம் வசூல் ரீதியாக பெரிதாக வசூல் செய்யவில்லை. ஆனால், இந்த படத்தின் ஆக்ஷன் காட்சிகளை பலரும் பாராட்டிய நிலையில், அதற்காக சூர்யா சேதுபதி எந்தளவுக்கு கஷ்டப்பட்டு நடித்துள்ளார் என்றும் தனது உடல் எடையை குறைத்து MMA ஃபைட்டராக மாறிய காட்சிகளையும் காட்டியுள்ளனர். தொடர்ந்து சூர்யா சேதுபதி நல்ல கதைகளை செலக்ட் செய்து நடித்தால், அடுத்த ஆக்ஷன் ஹீரோவாக தமிழ் சினிமாவில் மாறிவிடுவார் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











