Phoenix: பபுள் கம் மேட்டரால் பாக்ஸ் ஆபீஸில் பலத்த அடி.. திங்கட்கிழமை பீனிக்ஸ் வெறும் இத்தனை லட்சம் தானா?
சென்னை: அனல் அரசு இயக்கத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி நடிப்பில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியான பீனிக்ஸ் திரைப்படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்த நிலையில், பாக்ஸ் ஆபீஸில் படுதோல்வியை அந்த படம் சந்தித்துள்ளது. முதல் நாள் பெரிதாக வசூல் இல்லை என்றாலும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வசூல் சற்றே சில லட்சங்கள் அதிகரித்தன.
ஆனால், திங்கட்கிழமையான நேற்று மற்ற படங்களையே பார்க்க நினைக்காத மக்கள் விஜய் சேதுபதியின் மகன் படத்தை கண்டுக்கவே இல்லை என்பது தான் தெளிவாக தெரிகிறது.

படத்தை வெளியிடவே ஒரு வருடம் பல இன்னல்களை சமாளித்து ஹீரோவாக அறிமுகமாக நினைத்த சூர்யா சேதுபதிக்கு ஆரம்பத்திலேயே பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. அடுத்தடுத்த படங்களில் சரியான கவனத்தை சேர்த்து நடிப்புக்கு தீனிப்போடும் வகையில் நடித்தால் அவரும் அப்பாவை போல பெரிய வளர்ச்சியை பெறலாம் என்கின்றனர்.
பபுள் கம் மேட்டர்: வாரிசு நடிகர்கள் சினிமாவில் நடிக்க வந்தாலே நெபோடிசம் சர்ச்சை வெடித்து விடுகிறது. ஆரம்பத்தில் "அப்பா வேற நான் வேற" என என்றும் என் பெயர் வெறும் சூர்யா தான் என்றும் அவர் கொடுத்த பில்டப் எல்லாம் ட்ரோலாக மாறியது. படத்துக்கான புரமோஷன் பேட்டிகளில் பேசும் போது, ஆரம்பத்திலேயே பல பெரிய நடிகர்களும் இதை போலவே விமர்சனங்களை சந்தித்து வந்திருக்கின்றனர். எனக்கு விழுந்தது எல்லாம் லேசான அடி தான் என பக்குவப்பட்டவர் போல பேசி வந்தார். ஆனால், பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது பபுள் கம் சாப்பிட்டுக் கொண்டிருந்தது பெரிய சர்ச்சையாக வெடித்து ஏகப்பட்ட வன்மத்தை விஜய் சேதுபதி மகனுக்கு எதிராக கொட்ட ஆரம்பித்து விட்டனர்.
திங்கட்கிழமை சோலி முடிந்தது: பீனிக்ஸ் வீழான் என பக்காவான டைட்டில் எல்லாம் வைத்து ஆக்ஷன் காட்சிகளில் அட்டகாசம் செய்து அனல் பறக்கவிட்டாலும் அதையெல்லாம் ரசிக்க மக்கள் தயாராக இல்லை. முதல் நாள் 9 லட்சமும் 2வது நாள் 21 லட்சமும் ஞாயிற்றுக்கிழமை 25 லட்சமும் என ஏறிய வசூல் திங்கட்கிழமையான நேற்று வெறும் 7 லட்சம் மட்டுமே வசூல் செய்ததாக sacknilk இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது. இதுவரை ஒட்டுமொத்தமாக பீனிக்ஸ் திரைப்படம் 62 லட்சம் மட்டுமே வசூல் ஈட்டியிருக்கிறது. இந்த ஆண்டு அப்பா விஜய் சேதுபதி நடித்த ஏஸ் மற்றும் மகன் சூர்யா சேதுபதி நடித்த பீனிக்ஸ் என இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபீஸில் தோல்வியை தழுவியுள்ளன.


Click it and Unblock the Notifications











