விஜய் சேதுபதி செய்த காரியத்தால் திக்குமுக்காடி போன ரசிகர்கள்...அப்படி என்ன செய்தார் ?
சென்னை : விஜய் சேதுபதி செய்த காரியத்தால் அவரின் ரசிகர்கள் சந்தோஷம் கலந்த அதிர்ச்சியில் திக்குமுக்காடி போய் உள்ளனர். இதற்காக அவரை பாராட்டி சோஷியல் மீடியாக்களில் அதிகமானவர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். என்ன மனுஷன்யா இவரு...இதனால் தான் இவரை மக்கள் செல்வன்னு சொல்றாங்களா என வியந்து பாராட்டி வருகின்றனர்.
இந்தியாவின் பல மொழிகளிலும் பிரபலமான, பிஸியான நடிகர் விஜய் சேதுபதி என்பது அனைரும் அறிந்தது தான். ஒரே சமயத்தில் ஹீரோ, வில்லன், கேரக்டர் ரோல், ஸ்பெஷல் ரோல் என பலவற்றிலும் தோன்றி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்து வருகிறார். இவரது நடிப்பு திறமையை மற்ற மொழி சினிமாக்காரர்களும், ரசிகர்களும் கூட கொண்டாடி வருகிறார்கள்.

ஒரே சமயத்தில் இத்தனை படங்களா
விஜய் சேதுபதி தற்போது தமிழில் விக்ரம், மாமனிதன், கடைசி விவசாயி, யாதும் ஊரே யாவரும் கேளீர், காத்து வாக்குல ரெண்டு காதல், விடுதலை, விஜேஎஸ் 46 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இது தவிர இந்தி, மலையாள மொழி படங்கள், வெப் சீரிஸ் போன்றவற்றிலும் நடித்து வருகிறார். நடிகர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், பாடலாசிரியர் என படுபிஸியாக உள்ளார்.

அதிர்ச்சி கொடுத்த விஜய் சேதுபதி
இந்நிலையில் திண்டிவனத்தில் நடந்த ரசிகர் மன்ற நிர்வாகியின் திருமணத்திற்கு திடீரென சென்று, ரசிகர்கள், உறவினர்கள் என அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் விஜய் சேதுபதி. விழுப்புரம் மாவட்ட விஜய் சேதுபதி ரசிகர் மன்ற இளைஞர் அணி தலைவராக இருப்பவர் புகழேந்தி. இவருக்கும் மகாலட்சுமி என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. முதல் நாள் இரவு நடந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு தான் விஜய் சேதுபதி திடீரென வந்து கலந்து கொண்டுள்ளார்.

மாப்பிள்ளையை அழுக வச்சுட்டாரே
நூற்றுக்கணக்கானவர்கள் கூடி இருந்த அந்த திருமண விழாவில், திடீரென வந்து மேடைக்கு சென்று மணமக்களை வாழ்த்தி உள்ளார் விஜய் சேதுபதி. புகழேந்தியின் கைகளை பிடித்து வாழ்த்து தெரிவித்த விஜய் சேதுபதி, அவரை கட்டி அணைத்து, கன்னத்தில் முத்தம் கொடுத்தார். இதனால் சந்தோஷத்தில் மேடையிலேயே மணக்கோலத்தில் இருந்த புகழேந்தி அழுது விட்டார்.

சுற்றி வளைத்த ரசிகர்கள்
திண்டிவனத்திற்கு ரசிகரின் திருமணத்திற்காக விஜய் சேதுபதி வந்திருக்கும் விஷயம் காட்டுத்தீ போல ஏரியா முழுவதும் பரவியதால், திருமண மண்டபத்திற்கு ரசிகர்கள் படையெடுக்க துவங்கினர். திருமண மண்டபத்தை விட்டு வெளியே வர முடியாத அளவிற்கு விஜய் சேதுபதியை சுற்றிக் கொண்ட ரசிகர்கள், செல்ஃபி, போட்டோ எடுத்தனர். விஜய் சேதுபதி வந்து போனதால் அந்த ஏரியாவை சிறிது நேரம் பரபரப்பானது. ரசிகரின் திருமண விழாவில் விஜய் சேதுபதி கலந்து கொண்ட போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் படு வேகமாக இணையத்தில் பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications