பாலு மகேந்திரா சொன்ன வார்த்தை.. விஜய் சேதுபதிக்கு பிறந்த நம்பிக்கை.. இப்படியும் நடந்திருக்கா?
சென்னை: விஜய் சேதுபதி தமிழ் மற்றும் ஹிந்தியில் மிகச்சிறந்த நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். நடித்தால் ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்காமல் கதைக்கு தேவைப்பட்டால் வில்லனாகவும் நடித்தார். ஆனாலும் அவர் தொடர்ந்து ஹீரோவாக மட்டும்தான் நடிக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கோரிக்கை வைத்ததை அடுத்து இனி ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என்று கூறியிருக்கிறார். இந்தச் சூழலில் அவர் அளித்திருக்கும் பேட்டி ஒன்று ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.
விஜய் சேதுபதி இப்போது டாப் ஹீரோக்களில் ஒருவர். சின்ன சின்ன வேடங்களில் நடித்து, பல அவமானங்களை சந்தித்து இன்று வெற்றி நாயகனாக வலம் வந்துகொண்டிருக்கிறார். நடித்தால் ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என்று இல்லாமல் கதைக்கு தேவை என்றால் எந்த ரோலாக இருந்தாலும் செய்யக்கூடியவர். அப்படி அவர் நடித்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. இதனாலேயே அவருக்கென்று தனி ரசிகர்கள் உருவாக தொடங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வில்லன்: குறிப்பாக ரஜினியுடன் பேட்ட, விஜய்யுடன் மாஸ்டர், கமலுடன் விக்ரம், ஷாருக்கானுடன் ஜவான் என அவர் வில்லனாக நடித்த படங்களிலும் அசால்ட்டாக ஸ்கோர் செய்தார். இதற்கிடையே ஃபர்ஸி வெப் சீரிஸிலும் நடித்து அட்டகாசம் செய்திருந்தார். ஃபர்ஸி, ஜவான் மூலம் ஹிந்தியிலும் கவனம் ஈர்த்தார். மேலும் ஹிந்தியில் கடைசியாக நடித்த மெரி கிறிஸ்துமஸ் படமும் நல்ல வரவேற்பையே அவருக்கு பெற்றுக்கொடுத்தது.
மகாராஜா: இதற்கிடையே விஜய் சேதுபதி ஹீரோவாக தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் ஆசைப்பட்டனர். அதன்படி தனது 50ஆவது படமாக மகாராஜா படத்தில் நடித்திருக்கிறார் அவர். குரங்கு பொம்மை இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கியிருந்த அந்தப் படம் சமீபத்தில் வெளியாகி மெகா ப்ளாக் பஸ்டர் ஆகியிருக்கிறது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் படம் சக்கைப்போடு போட்டு வருகிறது. அடுத்ததாக அவர் ட்ரெய்ன் படத்தில் நடித்துவருகிறார்.
கவனம் ஈர்க்கும் விஜய் சேதுபதி: நடிகராக மட்டுமின்றி ஒரு மனிதனாக அவர் பேசுவதையும் ரசிகர்கள் அதிகம் ரசித்துவருகின்றனர். பேட்ட படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில்கூட, 'விஜய் சேதுபதி பேசுவது ஒரு மகான் பேசுவது போன்று இருக்கிறது. அவர் வாழ்க்கையை வேறுவிதமாக பார்க்கிறார்’ என்று ரஜினிகாந்த் புகழாரம் சூட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. சேது அப்படி பேசுவதற்கு வாழ்க்கையில் அவர் பட்ட அடிகள்தான் காரணம். ஏகப்பட்ட கஷ்டங்களையும், அவமானங்களையும் சந்தித்துதான் இன்று மகாராஜாவாக உயர்ந்து நிற்கிறார்.
விஜய் சேதுபதி பேட்டி: இந்நிலையில் விஜய் சேதுபதி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “எனக்கு 25 வயது ஆகும்போதே முடி, தாடி எல்லாம் நரைத்துவிட்டது. அப்போது என்னை பார்த்த எனது தங்கை, 'ஏன் டா உனக்கு முடி, தாடி எல்லாம் நரைச்சு போயிடுச்சு. இன்னுமா சினிமால வாய்ப்பு தேடிட்டு இருக்க’ என்று கேட்டார். பிறகு ஒருநாள் பாலு மகேந்திரா சாரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் என்னிடம், உனது கண்கள் நன்றாக இருக்கின்றன என்று சொல்லி ஃபோட்டோ எடுத்தார்.
செம ஹேப்பி: அவர் எடுத்த புகைப்படங்களில் ஒரு காப்பியை அவர் வைத்துக்கொண்டார். இன்னொரு காப்பியை என்னிடம் கொடுத்துவிட்டார். பிறகு வீட்டுக்கு வந்த நான் எனது தங்கையிடம், பாலு மகேந்திரா சார் ஒரு லெஜண்ட். அவருக்கு என்னிடம் ஏதோ ஒன்று பிடித்திருக்கிறது. அதை வைத்து இந்த சினிமாவில் நான் பிழைத்துக்கொள்வேன் என்று மகிழ்ச்சியோடு கூறினேன்” என்றார்.


Click it and Unblock the Notifications











